தமிழன்பன்........ஆமாம். இம்முறையில் தான் சீன மக்களின் பழக்கவழங்கள் பற்றி மேலும் நன்றாக அறிந்து கொள்ள முடியும். கலை இது பற்றி சொல்லுங்கள்.
கலை........ பொதுவாக நிலா விழாவைக் கொண்டாடும் போது சீன மக்கள் மஞ்சள் அரிசி மதுவை குடிப்பர். நிலா விழா சீன வசந்த நாட்காட்டியின் படி ஆகஸ்ட் திங்கள் 15ம் நாளில் கொண்டாடப்படுகிறது.
தமிழன்பன்.........நான் மஞ்சள் அரிசி மது குடிப்பது பற்றிய பழக்கத்தை சில முறை கேட்டு தெளிவாக அறிந்து கொண்டுள்ளேன். கலை, துவான் விழா நாளில் சீன மக்களுக்கு மஞ்சள் அரிசி மது குடிப்பது வழக்கம் உண்டு என்று அறிந்தேன். அது உண்மையா?
கலை........மஞ்சள் அரிசி மது சீன வசந்த நாட்காட்டியின் படி வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் அதிகமாக அருந்தப்படுகின்றது. ஆகவே துவான் விழா, நிலா விழா, சிங் மின் விழா ஆகிய முக்கிய விழா காலங்களில் மஞ்சள் அரிசி மது குடிப்பது சீன மக்கள் வழக்கம். ஆனால் மஞ்சள் அரிசி மது அருந்தியது உடல் நலனுக்கு நன்மை வழங்கியதால் மக்கள் சாதாரண நாட்களிலும் இந்த மதுவை குடிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழன்பன்.........ஓ அப்படியா. இப்போது தான் எனக்கு புரிந்தது. பொதுவாக சீன நண்பர்கள் உணவு விடுதியில் சேர்ந்து உணவு உட்கொள்ளும் போது மஞ்சள் அரிசி மது வாங்கி அருந்துவதை பார்த்திருக்கிறேன்.
கலை......ஆமாம். இது சீன மக்கள் குறிப்பாக தென் சீனாவில் வாழ்கின்ற மக்களுக்கு அன்றாட வாழ்க்கை வழக்கமாக மாறியுள்ளது.
1 2 3
|