• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-13 17:22:37    
மூளை பொய் சொல்லுமா?

cri

பல்வேறு தகவல்களை அன்றாடம் அறிய வருகின்றோம். பலவற்றை ஏற்றுக்கொள்கின்றோம். அதிகமானவற்றை மறந்து அல்லது விட்டுவிடுகின்றோம். பல்வேறு உண்மைகள் அறிவியல் ரீதியாக எண்பிக்கப்பட்ட இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், பலவித பொய் தகவல்கள் உலகில் உலா வராமலில்லை. 18 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இன்றும் சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்று எண்ணிக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே மக்களிடம் உள்ள பொய்யான தகவல்களை ஒழிப்பது என்பது நாம் எண்ணுவதைவிட மிக கடினமான செயலாகும். உண்மையான மற்றும் பொய்யான தகவல்களை நாம் எப்படி எடுத்து கொள்கின்றோம்? எவ்வாறு மனதில் நிறுத்துகின்றோம்? என்பதெல்லாம் மூளையின் நினைவாற்றல் தொடர்பான கேள்விகளாக இருக்கின்றன. இவற்றை புரிந்துகொள்வதற்கு, நாம் தகவல்களை பெறுவது, மனதில் பதியவைப்பது, மூளையின் நினைவாற்றல், அதன் தகவல் சேமிப்புமுறை ஆகியவை மிக முக்கிய பங்குவகிக்கின்றன.

கணினியின் சேமிப்பு முறைகளை நாம் தெரிந்திருக்கலாம். கணினி சேமிப்பகத்திலிருந்து, சேமிக்கப்பட்ட தரவுகளை தேவையான போது புள்ளியோ எழுத்தோ மாறாமல் எடுக்க முடியும். நமது மூளை கணினி, தரவுகளை சரியாக சேமித்து வைப்பதை போன்று புள்ளியோ எழுத்தோ மாறாமல் சேமித்து வைப்பதில்லை. புதிய தகவல்கள் கிடைத்தவுடன் மூளையின் பின்புற மேட்டுப்பகுதியில் சேமிக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் மீண்டும் நினைவுப்படுத்துகின்ற ஒவ்வொரு முறையும், மூளை மறுபடியும் அதனை எழுதிக்கொள்கிறது. பின்னர் உடனடியாக அந்த தகவல்கள் மூளையின் புறநிலை பகுதிக்கு படிப்படியாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்படும்போது அந்த தரவுகள் முதன்முதலாக பெறப்பட்ட இடமும், அறிந்து கொள்ளப்பட காரணமாக இருந்த சூழ்நிலையும் பிரிக்கப்பட்டு விடுகின்றன. எடுத்துக்காட்டாக கலிபோர்னியாவின் தலைநகரம் சாக்கிரமன்தோ என்று நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதனை எப்படி கற்றுக்கொண்டோம், எந்த சூழ்நிலையில் அறியவந்தோம் என்பது நினைவிலிருக்காது. இது தான் நினைவாற்றல் இழப்பின் தொடக்கமாகும். இவ்வாறான நினைவிழப்பால் தான் அக்கூற்று உண்மையானதா? பொய்யானதா? என்பதை கூட மறந்துவிடும் நிலை ஏற்படலாம். நாட்கள் செல்லச்செல்ல இவ்வாறு நினைவிழப்பது மிகவும் அதிகரிக்கிறது.

1 2 3