• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-13 17:22:37    
மூளை பொய் சொல்லுமா?

cri

செய்திகளையும் தகவல்களையும் கேட்பவர்கள் தங்களுடைய முந்தைய பார்வைகளோடு ஒத்துபோகின்றவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதனை மரணதண்டனை பற்றிய ஆய்வில் தெளிவாக அறியமுடிகிறது. தங்களுடைய நிலைபாடுகளுக்கு எதிரான வாதங்கள் கொடுக்கப்பட்டபோதும், தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளாமல், அவரவர் நிலைப்பாடுகளில் மேலும் உறுதியடைந்ததது, தத்தமது பார்வையை உறுதிசெய்யும் தகவல்களை மட்டுமே எடுத்துக்கொள்வதை சுட்டுகிறது அல்லவா.

அதே ஆய்வில் தங்களுடைய ஆதரவு கருத்துக்கு எதிரான சாட்சிகளுக்கு அக்குழுவினரின் பதில் என்னவாக இருக்கும் என்று கற்பனைசெய்ய கேட்கப்பட்டது. அந்நேரத்தில் தங்களுடைய பார்வையிலிருந்து முரண்படுகின்ற தகவல்களை திறந்தமனத்தோடு வெளிப்படுத்தியதை ஆய்வாளர்கள் கண்டனர். தங்கள் பார்வைகளுக்கு அப்பாற்பட்ட செய்திகளை அல்லது தகவல்களை பெறுகின்றவர்கள், அவைகளை பற்றி சற்றுநேரம் சிந்தித்து, பி்ன்னரே கவனத்தில் எடுத்து கொள்வதை இது காட்டுகின்றது.

இதழியலாளர்களும், தகவல்களை பரவல் செய்கின்ற பணியாளர்களும் தாங்கள் உண்மையான செய்திகளை பரவல் செய்வதன் மூலம் பெய்யான தகவல்களுக்கு எதிராக செயல்படுவதாக எண்ணலாம். ஆனால் பொய் தகவல்களை பலமுறை பரவல் செய்கின்றவர்கள், தெளிவாக திட்டமிட்டு மக்கள் மனதில் விதைப்பதோடு, அவைகளை ஆழப்பதிய செய்கின்றார்கள்.

1919 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆலிவர் வென்டெல் கெல்மஸ் மக்களின் நடுவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற எண்ண ஆற்றலே உண்மைக்கு சரியான உரைகல் என்றார். உண்மையான கருத்துக்களாக இருந்தால் அவை எளிதாக பரவும் என்பதை அடிப்படையாக கொண்டு அவர் இவ்வாறு செல்லியிருக்கிறார். நம்முடைய மூளை இயற்கையாகவே உண்மையான கருத்துக்களை மட்டுமே மெச்சக்கூடிய அளவில் இல்லை. உறுதிபடுத்தப்படாத தகவலை பலமுறை அறியவந்தால் அது நீண்டகாலம் நிலைப்பதும், நமது உலக பார்வைகளுக்கு ஒத்ததான கருத்துக்களை தேர்ந்தெடுக்கும் பண்பு நிறைந்திருப்பதும் இன்றைய நிகழ்ச்சி மூலம் தெளிவாகிறது. எனவே நினைவாற்றலின் இயக்கத்தை முழுமையாக புரிந்துகொண்டு செயல்பட்டால் கெல்மஸ் அவர்கள் குறிப்பிட்ட இலக்கை நோக்கி முன்னேறலாம்.


1 2 3