• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-13 17:22:37    
மூளை பொய் சொல்லுமா?

cri

உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கிடைக்கின்றபோது, அவை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் பலமுறை மீண்டும் நினைவுப்படுத்தப்பட்டு மறுபடியும் மறுபடியும் மூளையின் பின்புற மேட்டுப்பகுதியில் எழுதப்பட்ட பின்னர், மூளையின் புறநிலை பகுதிக்கு அத்தகவல்கள் மாற்றப்படும். காலம் செல்லச்செல்ல இத்தகவல் முதன்முதலாக பெறப்பட்ட இடம் மற்றும் சூழ்நிலை மறக்கப்பட்டவுடன், அந்த தகவலும், அது உண்மையென எண்ணுகின்ற நிலையும் வலிமையடையும். இவ்வாறு தான் பலவித வதந்திகள், பொய்கள் பரப்பப்பட்டு மக்களிடம் வலம் வருகின்றன.

எனவே நரம்பியல் தொடர்பான இந்த நினைவாற்றல் இழப்பு பற்றி நாம் சரிவர அறியாமலிருந்தால் விளம்பர உத்திகள் மூலம் தவறான தகவல்களை பரவச்செய்வது மிகவும் எளிது. ஒரு தகவல் தொடக்கத்தில் நினைவில் வைக்கப்படக்கூடியதாய் அமைந்துவிட்டால், பிற்காலத்தில் அது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் கூட, தொடர்ந்து மக்கள் மனதில் பல நாட்கள் நிலைக்கும் என்பதை விளம்பரத்துறையினர் நன்கு அறிவார்கள். நான் எங்கோ வாசித்திருக்கிறேன், சிலவேளைகளில் இந்த புத்தகத்தில் தான் வாசித்தேன் என்று புத்தக பெயரை கூட குறிப்பிட்டு நம்மால் பேசப்படுகின்றவை இத்தகைய தகவல்களாக இருக்கக்கூடும்.

இந்த கருத்துக்களை மெய்பிப்பதாக தான் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வும் அமைந்திருந்தது. ஸ்டான்ஃபோர்டு மாணவர் குழு ஒன்று இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட நிரூபிக்கப்படாத, கோக்கோ கோலா சிறந்த பெயிண்ட் தின்னர் அதாவது வண்ணம் அடிக்கப்படுவதற்கு முன்பு மரசட்டங்களில் பூச சிறந்தது என்ற கூற்றை வாசித்தனர். அதனை இரண்டுமுறை வாசித்தவர்களை விட, ஐந்து முறை வாசித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலோட்டமான நம்பிக்கை காட்டியதை ஆய்வாளர்கள் அறியவந்தனர்.

நாம் பெற்றிருக்கின்ற தகவல்களை நினைவில் கொள்ளும்போததெல்லாம் அவற்றை மறுபடியும் எழுதிக்கொள்வதே நமது மூளை, உண்மைகளை நினைவில் வைத்திருக்கும் இயற்கையான முறையாகும். பல கருத்துக்களை நாம் அறியவருகின்றபோது நமது உலகப் பார்வையோடு ஒத்துப்போகின்ற கருத்துக்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்கு முரண்படுகின்றவற்றை விட்டுவிடுகின்ற பண்பு நம்மிடம் அதிகமாக உள்ளது. அதாவது எல்லா தகவல்களையும் நாம் உடனடியாக உள்வாங்கி கொள்வதில்லை.

ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் 48 பேரில் பாதிபேர் மரணதண்டனையை ஆதரித்தனர். பிறர் அதனை எதிர்த்தனர். அவர்களுக்கு மரணதண்டனையை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இரு சாட்சிகள் விவரமாக விளக்கப்பட்டன. சாட்சிகளால் தெளிவடைந்த மாணவர்களில் மரணதண்டனையை ஆதரித்தவர்கள் அதனை எதிர்க்கவோ, எதிர்த்தவர்கள் அதனை ஆதரிக்கவோ இல்லை. மாறாக தங்களின் கருத்துக்களில் அவர்கள் இன்னும் உறுதியடைந்திருந்தனர்.

1 2 3