• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-15 15:15:22    
சீனாவில் கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொண்டு வரும் ஆப்பிரிக்க மாணவர்கள்

cri
இக்கடுரையில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சில மாணவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் WU QIAO கழைக் கூத்து கலைப் பள்ளியில் அவர்கள் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் மிக இளையவருக்கு வயது 11. மிக மூத்தவருக்கு வயது 23. வெகு தூரத்திலிருந்து சீனாவுக்கு வந்து கழைக் கூத்து கலையை அவர்கள் கற்றுக் கொள்வதற்கான காரணம் பற்றியும், சீனாவில் அவர்களின் வாழ்க்கை பற்றியும் இக்கட்டுரையில் அறிமுகப்படுத்துகின்றோம்.

ஹேபெய் மாநிலத்தில் அமைந்துள்ள ஊ சியௌ மாவட்டம், கழைக் கூத்து கலையின் ஊர் என்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புகழ்பெற்றது. சீன ஊ சியௌ கழைக் கூத்து கலைப் பள்ளி இம்மாவட்டத்தில் உள்ளது. 1999ஆம் ஆண்டில், "சீன ஊ சியௌ சர்வதேச கழைக் கூத்து கலை பயிற்சி மையம்" என்று சீனப் பண்பாட்டு அமைச்சகத்தினால் இப்பள்ளிக்கு பெயர் சூட்டப்பட்டது. அதற்குப் பின், வெளிநாடுகளின் கழைக் கூத்து கலைஞருக்கு பயிற்சி அளிக்கும் கடமையை இப்பள்ளி ஏற்றுக் கொண்டு வருகிறது. இதுவரை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பல நாடுகளின் 5 தொகுதி மாணவர்களுக்கு அது பயிற்சி அளித்துள்ளது. தற்போது 6வது தொகுதி மாணவர்கள் இங்கே பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இப்பள்ளியின் துணைத் தலைவர் QI ZHI YI பெருமையுடன் கூறியதாவது—

"ஊ சியௌ, உலகளவில் புகழ்பெற்ற கழைக் கூத்து கலையின் ஊராகும் என்பது, வெளிநாட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி ஊ சியௌ மாவட்டத்திலுள்ள எமது பள்ளியில் மேற்கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாகும். இங்கே பயிற்சி பெற்று வரும் ஆப்பிரிக்க மாணவர்களின் கூற்று, 'கழைக் கூத்து கலையின் பிறப்பிடமான சீனாவுக்கு வந்து உண்மையான கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொள்ள விரும்புகின்றோம்' என்பதாகும்" என்றார் அவர்.

1 2 3