• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-15 15:15:22    
சீனாவில் கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொண்டு வரும் ஆப்பிரிக்க மாணவர்கள்

cri

மேலும், இந்த மாணவர்கள் பெரும் முயற்சியுடன் பயிற்சி பெறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஓய்வு பெறுகின்றனர் என்றும் அவர் செய்தியாளரிடம் கூறினார்.

எமது செய்தியாளர் பேட்டி கண்ட நாள் சனிக்கிழமை. அவர் பயிற்சி மண்டபத்தில் நுழைந்த போது, 30க்கு மேற்பட்ட ஆப்பிரிக்க மாணவர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண் குழந்தை செய்தியாளரின் கவனத்தை ஈர்த்தது. சுமார் 140 சென்டி மீட்டர் உயரமான அவர், குட்டிக்கரண பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவரது பெயர் Aileen. கென்யாவைச் சேர்ந்த அவருக்கு வயது 11 மட்டுமே. இந்தத் தொகுதி மாணவர்களில் இவரே மிக இளையவராவார் என்று அவரது பயிற்சியாளர் LIANG WEN JIANG கூறினார். சொந்த ஊரை விட்டு, தொலைதூரத்திலான சீனாவுக்கு வந்து கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொள்வது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், Aileen தயக்கமின்றி கூறியதாவது—

"என்னைப் பொறுத்தவரை, கழைக் கூத்து கலையை விரும்புவதால், அதில் பயிற்சி பெற நான் சீனாவுக்கு வந்துள்ளேன்" என்றார் அவர்.

சிறுமியான Aileenனால், சில சமயம் தனது எண்ணத்தை தெளிவாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவருக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான பரிமாற்றம் மொழித் தடையினால் குன்றிவிடவில்லை. தாம் விரும்பும் மாணவர்களில் அவரும் ஒருவர் என்று பயிற்சியாளர்கள் பலர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

கென்யாவை சேர்ந்த ஆண் குழந்தை Ronandக்கு வயது 14. Aileenனிடம் செய்தியாளர் கேட்ட அதே கேள்விக்குப் பதிலளிக்கையில், Aileenனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர் பக்குவம் அடைந்தவராக காணப்படுகிறார். அவர் கூறியதாவது—

"கழைக் கூத்து கலை பற்றி சீன மக்கள் சிறப்பாக புரிந்து கொள்கின்றனர். கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொள்ள நான் சீனாவுக்கு வந்தேன். ஏனென்றால், எனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மாற்ற விரும்புகின்றேன்" என்றார் அவர்.

பல முறை தேர்வுக்குப் பின் சீனாவில் கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால், தாம் இந்த வாய்ப்பை மிகவும் மதிப்பதாக Ronand கூறினார். அவரது அன்றாட பயிற்சிகளில், வானில் உயரே குட்டிக்கரணம் அடிப்பது, ஒரு சக்கர மிதி வண்டி ஓட்டுவது முதலியவை அடங்கும். இத்தகைய பயிற்சிகள் கடினமானவையா என கேட்கப்பட்ட போது, கடினமில்லை என்று அவர் தன்னம்பிக்கையுடன் கூறினார்.

1 2 3