• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-15 15:15:22    
சீனாவில் கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொண்டு வரும் ஆப்பிரிக்க மாணவர்கள்

cri

அவருக்கும் பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையில் மறக்க முடியாத சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததா என்றும் எமது செய்தியாளர் அவரிடம் கேட்டார். அவர் பேசுகையில், பயிற்சியாளரும் ஆசிரியர்களும் தங்களுடன் கனிவுடன் பழகுகின்றனர் என்று கூறினார். தங்களது அனைத்து தேவையையும் அவர்கள் ஏறக்குறைய நிறைவேற்ற முடியும். தாம் அனைவரும் இதனால் மனம் நெகிழ்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். பயிற்சியாளர் MA CHAO அவருக்கும் Ronandக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு கதையை செய்தியாளரிடம் கூறினார்.

"கென்யாவிலிருந்து வந்த Ronand, அனைவருடனும் நட்புடன் பழகுகிறார். சொந்த ஊரை மிகவும் நினைத்த போது, 'ஆசிரியரே, என்னை அரவணையுங்கள்' என அவர் என்னிடம் கூறுகிறார். ஒரு தடவை நான் ஆழமாக மனம் உருகினேன். ஒரு குளிர் நாள், கம்பளி ஆடைகள் சிலவற்றை நான் கொண்டு வந்து, இத்தகைய வானிலைக்கு பழகிக் கொள்ளாத அவருக்கு வழங்கினேன். அப்போது அவர் என்னை அரவணைத்து, அப்பா என அழைத்தார். எனக்கு வயது 23 மட்டும். அப்பா என்று அழைக்கப்பட்ட போது கொஞ்சம் வெட்கம் அடைந்த போதிலும், நான் மனம் உருகினேன்" என்றார் அவர்.

செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், எத்தியோபியாவைச் சேர்ந்த Hibreate பற்றி இப்பள்ளியின் துணைத் தலைவர் QI ZHI YI அறிமுகப்படுத்தினார். 23 வயதான அவர், இந்தத் தொகுதி ஆப்பிரிக்க மாணவர்களில் மிக மூத்தவராவார். அவரும் ஆங்கில மொழியில் மிக நன்றாக பேசக் கூடியவர்களில் ஒருவர். சொந்த செலவில் சீனாவில் கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொள்வதால், மற்ற வெளிநாட்டு மாணவர்களிலிருந்து அவர் வித்தியாசமாக உள்ளார். அவர் கூறியதாவது—

"எத்தியோபியாவில் இருந்த போது, தொலைக்காட்சி மற்றும் இதழ் மூலம் சீனப் பண்பாடு பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டேன். எனது நண்பர்களும் தங்கையும் சீனா மீது ஆர்வம் கொண்டிருக்கின்றனர். என் தங்கை கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொள்ள இப்பள்ளிக்கு வந்தார். அதற்குப் பின் இந்தப் பள்ளிக்கு நானும் வந்தேன்" என்றார் அவர்.

அன்றைய பேட்டி முடிவடைவதற்கு முன், அவர் ஆங்கில மொழியில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

"அனைவருக்கும் 2008ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கவும், அனைத்து சீன மக்களும் இன்பமாக வாழவும் வாழ்த்துக்கள்" என்றார் அவர்.


1 2 3