சீ.வ. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி இந்நிகழ்ச்சி மூலம் உங்களுக்கு சேவை புரிகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஷென்சௌ 7 விண்கல விண்வெளிப் பயணம் மற்றும் தேசிய விழா கொண்டாட்டம் பற்றி கூறுகின்றோம்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 59வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களும் துணை நிலை தூதரகங்களும் தேசிய விழாவுக்கான விருந்து அளித்தன. நைஜீரியாவில் வாழ்கின்ற சீனர்கள், சீன முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அங்குள்ள பல்வேறு தூதாண்மை அதிகாரிகளுடன் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஷென்சௌ 7 விண்கலப் பயணம் ஆகியவற்றை நினைவு கூர்ந்து சீனாவின் 59வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தரார்கள்.
நைல்ஜீரியாவிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதாண்மை அதிகாரிகள் வெற்றிகரமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை சீனா நடத்தியதற்கு மதிப்பையும் பாராட்டையும் தெரிவித்தனர். தலைநகர் லாகோஸிலுள்ள லெபனானின் துணை நிலை தூதர் நசார் சீன மக்கள் குடியரசின் 59வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த போது சீனா வெற்றிகரமாக நடத்திய பெருநில ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்தார். அவர் கூறியதாவது.
மகத்தான சீனாவுடன் லெபனான் சிறந்த உறவை நிலைநிறுத்தியுள்ளது. சீனா நிறுவப்பட்ட 59வது ஆண்டு நிறைவை வாய்ப்பாக பயன்படுத்தி பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனா தங்கப் பதக்க வரிசையில் முதலாவது இடத்தை பெற்றமைக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன். அது உண்மையான மகத்தான உலக விழாவாக அமைந்தது. சீனா மிகவும் சிறப்பாக அவற்றை நடத்தியது. சீனாவுக்கும் சீன மக்களுக்கும் மிகவும் அருமையான வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன் என்றார் நசார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன. அதன் மூலம் உலகம் சீனாவை அறிந்து கொண்டுள்ளது. லாகோஸிலுள்ள பிரேசிலின் துணை நிலை தூதர் அலெக்லஸாண்டிரிய பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீன விளையாட்டு வீரர்கள் காட்டிய தலைசிறந்த நன்நடத்தை சீனாவின் வல்லரசிற்கான தோற்றத்தை காட்டியுள்ளது என்று பாராட்டினார். இது பற்றி அவர் கூறியதாவது.
மக்கள் என்றுமே பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நினைவில் கொண்டிருப்பர். அதனை ஒப்பிடுவதற்கு எதுவும் இணையாக இல்லை. துவக்க மற்றும் நிறைவு விழாக்களின் பிரமாண்டமான ஏற்பாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் சீன விளையாட்டு வீரர்கள் 51 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளதும் மிகவும் பாராட்டுதற்குரியது. சீனா மேலும் சிறப்பாக வளர வாழ்த்துகின்றேன் என்று அலெக்ஸாண்டிரிய கூறினார்.
நைல்ஜீரியாவின் சீன வணிக மற்றும் வர்த்தக தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் சியென் கோ லின் சீனாவின் சிச்சுவான் மாநிலத்து வென்ச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டாவது நாளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்குமாறு அவர் நைல்ஜீரியாவில் சீனத் தொழில் முனைவோரை அணிதிரட்ட முயற்சித்தார். இத்தகைய இயற்கை சீற்றம் இனிமேல் நிகழ கூடாது என்றும் அவர் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது.
பனி சீற்றம் முதல் கடும் நிலநடுக்கம் வரை தாய்நாட்டில் நிகழ்ந்த பேரிடர் எங்கள் மனங்களை புன்படுத்தியுள்ளன. எமதருமை சீன தாய்நாட்டு மக்கள் அமைதியாக வாழவே தாம் விரும்புவதாக அவர் கூறினார்.
1 2 3
|