
சீன மக்கள் இயற்கை சீற்றத்தை சமாளிப்பதோடு வெற்றிகரமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். தேசிய விழா விருந்து நடத்துவதற்கு முந்திய சில மணி நேரத்தில் ஷென்சௌ 7 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுதல் சீன-நைல்ஜீரிய உறவின் வளர்ச்சிக்காக மேலும் பாடுபட தன்னை ஊக்குவிக்கும் என்று சங்கத் தலைவர் சியென் கோ லிங் தெரிவித்தார். அவர் கூறியதாவது.
இப்போது எங்கள் மனங்கள் உணர்ச்சிகளால் நிறைந்துள்ளன. எனதருமை தாய்நாட்டின் உயர் அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, தாய்நாட்டின் செழுமை ஆகியவற்றை கண்டு நாங்கள் பெருமை மகிழ்ச்சியடைந்துள்ளோம். நாட்டின் போராட்ட எழுச்சியை கொண்டு நைஜீரியாவின் சமூகத்துடன் இணைந்து சீன-நைஜீரிய நட்பையும் வர்த்தகத்தையும் முன்னேற்றுவோம் என்றார் அவர்.
சீனாவின் சியாங் சூ மாநிலத்தின் சூச்சோ நகரைச் சேர்ந்த சியே சியௌ மிங் பல்கலைகழகத்தில் விண்வெளி ஆய்வுத் துறையில் பயின்றார். இப்போது அவர் நைல்ஜீரியாவில் இயந்திர நிறுவனத்தை நடத்துகிறார். ஆனால் தன்னையோ விண்வெளி துறையைச் சேர்ந்தவராககவே அவர் கருதுகிறார். இது பற்றி அவர் கூறியதாவது.
இவ்வாண்டு நான் நைஜீரியாவில் வாழ்கின்ற 12வது ஆண்டாகும். ஷென்சௌ 7 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட செய்தியை அறிந்து மூத்த விண்வெளி துறையினரான நான் பெருமை அடைகின்றேன். நைஜீரியாவில் வாழ்ந்து வருகின்ற இந்த ஆண்டுகளில் ஒவ்வொரு அக்டோபர் முதல் நாளான தேசிய விழாவைக் கொண்டாடும் போது தாய்நாடு மேன்மேலும் வலுபட்டு வளர்வதை உணர்ந்துள்ளேன். 12 ஆண்டுகளுக்கு முன் நைஜீரியாவுக்கு வந்த போது நைஜீரிய மக்கள் சீனா பற்றி நன்றாக அறிந்து கொள்ள வில்லை. இவ்வாண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பின் எங்கள் பல வணிக ஒத்துழைப்பாளர்களும் ஆப்பிரிக்க நண்பர்களும் எனக்கு பெருவிரலை மேலுயர்த்தி காட்டி பாராட்டினார்கள் என்றார் அவர்.
1 2 3
|