
நைல்ஜீரியாவில் புகழ் பெற்ற ஹாங்காங் தொழில் முனைவோர் துங் ரெய் ஸு தொலைக் காட்சி மூலம் ஷென்சௌ 7 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதை கண்டு இரசித்தார். அவர் நைல்ஜீரியாவில் 37 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார். வலிமையான தாய்நாட்டு பின்னணியை சார்ந்துள்ள சீனர்கள் நைஜீரியாவில் அதிக மரியாதை பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது.
இப்போது எமது தாய்நாடு வலிமையாகியுள்ளதை பார்த்து மகிழ்ச்சியடைகின்றேன். இனிமேல் யாவரும் எங்களை துன்பப்படுத்த மாட்டார்கள் என்றார் அவர்.
இயற்கை சீற்றத்தை சமாளித்த மகத்தான வெற்றி, வெற்றிகரமாக நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஷென்சௌ 7 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வெளிக்காட்டப்பட்ட மகத்தான மிகு முன்னேற்றம் ஆகியவை 2008ம் ஆண்டை சீன மக்களை பொறுத்தவரை அசாதாரண ஆண்டாக மாற்றியுள்ளது. தாய்நாட்டின் எதிர்காலம் மேலும் சிறப்பாக இருக்கும் என நம்புவதாக நைஜீரியாவில் வாழ்கின்ற சீன மக்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
நேயர்கள் இதுவரை பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஷென்சௌ 7 விண்கல விண்வெளிப் பயணம் மற்றும் தேசிய விழா கொண்டாட்டம் பற்றி கேட்டீர்கள். இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. 1 2 3
|