• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-21 09:42:12    
ஒலிம்பிக்கில் சீனப் பண்பாட்டு அம்சங்கள்

cri
ஒலிம்பிக்கில் ஒன்றுகலந்து காணப்பட்ட சீனப் பண்பாட்டு அம்சங்களை பற்றி அறிமுகப்படுத்தினோம். சின்னஞ்சிறு விடயங்களாக இருப்பினும் நுட்பமான சீனப் பண்பாட்டு அம்சங்கள் ஒலிம்பிக்கில் காணப்பட்டதை விளக்கினோம். இன்றைய நிகழ்ச்சியில் மேலும் சில தகவல்கள்.

ஒலிம்பிக் கட்டிடங்கள்

பறவைக்கூடு, நீர்கன சதுரம், இவையிரண்டும் பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது உலகு முழுவதுமான மக்களது கண்களுக்கு விருந்தாகின. அறிவியல் தொழில்நுட்ப மாட்சியின் அடையாளங்களாக மட்டுமல்லாது பாரம்பரிய சீனக் கலையம்சத்தையும், பண்பாட்டு நுட்பங்களையும் எடுத்து இயம்பின. நீர் கன சதுரம் எனும் நீச்சல் விளையாட்டு மையம், சீனப் பண்பாட்டின் யின் யாங் தத்துவத்தையும், வட்ட சொர்க்கம், சதுர பூமி என்ற சீன கருத்தையும் எடுத்தியம்பியது. தேசிய உள் விளையாட்டரங்கின் கூரை பாரம்பரிய சீன விசிறி போல் அமைந்துள்ளது. சீனப் பண்பாட்டின் அழகியலையும், பாரம்பரிய செறிவையும் அது வெளிப்படுத்துகிறது.

இவை மட்டுமல்ல, பதக்கம் வழங்கும் போது பதக்கத்தையும், மலர்செண்டையும் கொண்டு வந்து பெண்கள் உடுத்திய உடைகள் கூட வெண்மை, இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் ஆகிய 5 நிறங்களில் அமைந்திருந்தன. இந்த நிறங்களும் சீனப் பண்பாட்டில் பெரிதும் காணப்படுகின்றன.

1 2 3