• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-21 09:42:12    
ஒலிம்பிக்கில் சீனப் பண்பாட்டு அம்சங்கள்

cri

பாராலிம்பிக் போட்டியிலான பண்பாட்டு அம்சங்கள்

பாராலிம்பிக் போட்டியின் மங்கல் சின்னமாக அமைந்தது ஃபூநியு லெலெ. ஒரு காலை தூக்கி, முன்னிரண்டு கால்களை பின்னே மனிதர்கள் கைகட்டுவது போல் அமைந்த பசுவின் உருவம்தான் ஃபூநியு லெலெ. எதற்கும் சாய்ந்துகொடுக்காமல், உறுதியாக நிற்கும் பசு, உடலளவில் சவால் விடுக்கப்பட்ட நமது மாற்றுத்திறனுடைய சகோதரர்களை அடையாளப்படுத்துகிறது. மேலும் மனிதரும் இயற்கையும் இயைந்த ஒரு வாழ்க்கையை, இணக்க நிலையை மனிதர்களின் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் நாம் அறியலாம். அந்த வகையில் பசுக்கள் நம் வாழ்வில் ஒன்று கலந்தவை, இயற்கையின் கொடையாக நமக்கு கிடைத்தவை. சீனப் பண்பாட்டின் படி பசுக்கள் அமோக விளைச்சலையும், நல்ல வானிலையையும் வரவேற்கும் மங்கல சின்னங்களாக கருதப்படுகின்றன.

1 2 3