• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-27 16:57:33    
கழிவு நீர் விவசாயம்

cri
தோழமையுடன், நேயர் நண்பர்களுக்கு வணக்கம். இன்றைய அறிவியல் உலகம் நிகழ்சசியில் கழிவுநீர் விவசாயம் பற்றி கேட்க இருக்கின்றோம்.

உலகில் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு மற்றும் தானிய வகைகளின் உற்பத்தியை பெருக்க வேண்டியுள்ளது. விவசாயிகளும், விளைபயிர் நிலங்களும் குறைந்து கொண்டு வருகின்ற காலக்கட்டத்தில் கலப்பு இன விதைகள் மூலம் விளைச்சலை உயர்த்தும் பல்வேறு முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. நீர் பற்றாகுறை விவசாயம் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சனையாகும். பருவகாலங்கள் பொய்த்து, நிலத்தடி நீர்வளம் குறைந்து வரும்வேளையில் விவசாயத்திற்கு தேவைப்படும் நீர் ஆதாராங்களை வளர்த்தெடுப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக நகரப்புறங்களில் நீர் சேமிப்பு மிகவும் குறைந்துள்ளதால் கழிவுநீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலை வளர்ந்துள்ளது. இவ்வாறு பயிர் செய்யப்படும்போது கழிவுநீரில் உள்ள மாசுபாடுகள் காய்கறி மற்றும் தானிய உற்பத்திப் பொருட்களின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்றால் நிச்சயமாக ஏற்படுத்தும். அப்படியானால் நகர்புற மக்களின் சுகாதாரம் கேள்விக்குள்ளாவதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

"கழிவுநீரால் பயிர் செய்வது என்பது ஒருசில ஏழை நாடுகள் செய்வதாகும். வளர்ந்து கொண்டிருக்கின்ற நாடுகளில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் இது பரந்து விரிவடைந்துள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க சகாரா பாலைவன புறப்பகுதிகளிலுள்ள எல்லா நகரங்களிலும், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் நகரங்களிலும் இது அதிகமாக பரவியுள்ளது" என்று சர்வதேச நீர் மேலாண்மை நிறுவன ஆய்வாளர் Liqa Raschid-Sally தெரிவித்திருக்கிறார். கழிவுநீரால் விவசாயம் என்று செல்லப்படுகின்ற போது தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு மற்றும் அமில மாசுபாடான நீரை பயன்படுத்தி காய்கறி மற்றும் தானிய பயிர் வகை விளைச்சல் செய்வதை தான் குறிப்பிடுகின்றோம். கழிவுநீரை பயன்படுத்தி செய்யப்படும் விவசாயத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளில், தொடர்புடைய துறையினர் அண்மையில் தான் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். கழிவுநீரால் செய்யப்படும் விவசாயம் குறித்த புதிய ஆய்வு ஒன்றை சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் 53 நகரங்களில் நடத்தியது. பல நாடுகளில் செய்யப்படுகின்ற கழிவுநீர் விவசாயம், அதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தர இழப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும். அதில் பல நகரங்களில் சுத்திகரிக்கப்படாத அல்லது பாதியளவே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. கழிவுநீர் விவசாயம் என்பது விவசாயிகளின் வருமானத்திற்கும், நகர உணவு பாதுகாப்பிற்கும் மிக முக்கியமாக இருந்தாலும், சுகாதார அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஆய்வு செய்யப்பட்ட 70 விழுக்காட்டிற்கு அதிகமான நகரங்களில் விவசாய நிலங்கள் கழிவுநீரால் அல்லது குளம், குட்டைகளில் தேக்கப்படுகின்ற கழிவுநீரால் மட்டுமே பயிர் செய்யப்படுவதாக தெரிகிறது.

1 2 3