• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-27 16:57:33    
கழிவு நீர் விவசாயம்

cri

இந்நிலையில், நீர் தரக் கட்டுப்பாடுகளோடு, சரியான சுகாதார இலக்குகளை முன்நிறுத்தி உலக சுகாதரா நிறுவனம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கழிவுநீரை பண்படுத்த முடியாத நாடுகள் குறைந்த செலவிலான கண்டுபிடிப்புகள், சொட்டுநீர் பாசனம், புதிய உற்பத்திப் பொருட்களை சுத்தமாக பேணுதல் போன்ற வழிமுறை மூலம் தங்கள் சுகாதாரத்திலுள்ள ஆபத்துகளை குறைக்க வழிசெய்யலாம். அத்துடன் ஒவ்வொரு நாடுகளும் கழிவுநீர் விவசாயத்தால் ஏற்படும் சுகாதார இடர்பாட்டை போக்கும் புதிய முறையை தற்சார்பாக நிறுவி வளர்த்தெடுப்பது இன்னொரு நல்ல முடிவாக அமையும். இந்தோனேசியா, நேபாளம், கானா, வியட்நாம் போன்ற நாடுகளில் விவசாயிகள் கழிவுநீரை குளம் குட்டைகளில் சேமிக்கின்றனர். அதில் உள்ள மாசுபாடுகள் நிலத்தில் படிந்து தேங்கிய பின்னர், அந்த நீரை பயிர்செய்ய பயன்படுத்துகின்றனர். இந்த வழிமுறை நீரிலுள்ள நச்சுயிரிகள் ஓரளவு குறைய வழிவகுக்கின்றது. இவ்வாறான புதிய முயற்சிகள் தொடர்ந்து, மாசுபாடற்ற நீரில் விவசாயம் என்ற நிலை வளர்வது அனைவரின் சுகாதாரத்திற்கும் உடல்நலத்திற்கும் நன்மை தரும்.


1 2 3