• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-27 16:57:33    
கழிவு நீர் விவசாயம்

cri

நம்மிடையே பலர் தக்காளி, கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வேக வைக்காமலேயே சாப்படும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். கழிவுநீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற காய்கறிகளையும் தானிய உணவு வகைகளையும் உண்பவர்கள், அதிலும் குறிப்பாக சமைக்காமல் உண்கின்றவர்கள் சுகாதார ரீதியாக ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என்று ஆய்விற்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படியானால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் எவை என்பது மட்டுமல்ல, அவை எங்கு பயிரிடப்படுகின்றன? எத்தகைய பாசன வசதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன? என அனைத்தையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் கழிவுநீர் நகர்புற பகுதிகளிலான விவசாயத்தில் மிகப் பெரிய பங்காற்றுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது நகர்புற உணவு வினியோகத்திற்கும், அங்குள்ள ஏழை மக்கள் தங்கள் வாழ்வுக்கான வருமானத்தை தேடிக்கொள்வதற்கும் பயன்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் மக்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை இது வழங்குவதாக உள்ளது.

இப்போது நகர்புறங்களில் கழிவுநீரை பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் விரிவாகியுள்ளதோடு தவிர்க்க முடியாத ஒன்றாகவும் மாறிவிட்டது. வளருகின்ற நாடுகளில் கிராமப்புறங்களில் விளைகின்ற விரைவில் கெட்டுப்போகக்கூடிய உணவுப்பொருட்களை நகரங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய போதிய போக்குவரத்து வசதிகளை வளர்த்தெடுக்காத வரை இந்நிலை தொடரும். நீர் பஞ்சம் ஏற்படுகின்ற சூழ்நிலையில் சற்றே சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத நீரையோ, மாசுபாடான ஆற்று நீரையோ தான் விவசாயிகள் பயன்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இத்தகைய நிலைமைகளில் மாசுபாடான நீரால் விவசாயம் செய்வதை தடைசெய்வது போன்ற கடுமையான நடவடிக்கைளை அல்லது அதிக நீர் தர வரையறையை மேற்கொள்வது என்பவை பயனுள்ளதாக இருக்காது. இவை நகர்புற நுகர்வோரையும் விவசாயிகளையும், அதனை நம்பி வாழ்ந்து கொண்டிருப்போரையும் மிகவும் மோசமாக பாதிக்கும்.

1 2 3