• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-28 17:07:58    
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் சீனத் தனிச்சிறப்புகள் அ

cri
2008 பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் உலகையே அதிசயிக்கவைத்த அற்புதமாய் நடந்தேறியுள்ளன. மழை ஓய்ந்தும் தூறல் இன்னும் நிற்கவில்லை என்பது போல், இவ்விரு வகை ஒலிம்பிக் விளையாட்டுக்களும் பரவலாக உலகம் முழுதும் செய்தி ஊடகங்களால் அசைபோடப்பட்டு வருகின்றன.

இன்றைய சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் உங்களுக்காக, பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற பல்வேறு சீனத் தனிச்சிறப்புமிக்க அம்சங்களை பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் மீளாய்வு செய்கிறோம்.

பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் செழுமையான சீனப் பண்பாட்டு அம்சங்கள் மிக அழகாக பிண்ணிப்பிணைந்திருப்பதை கொஞ்சம் கவனமாக பார்த்தால் கண்டுணர முடியும். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கின் எடுப்பான தோற்றத்திற்கும், அழகுக்கும் இந்த செறிவான பண்பாட்டு அம்சங்கள் மிகச் சிறப்பாக பொருந்தின. அதுவே இன்று உலகமே வியந்து பாராட்டக்கூடிய மாட்சியை இந்த போட்டிகளுக்கு தந்தது எனலாம்.

1 2 3