• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-28 17:07:58    
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் சீனத் தனிச்சிறப்புகள் அ

cri

ஃபூவாக்கள்

ஏற்கனவே நாம் விளையாட்டுச் செய்திகள் மற்றும் வேறு சில சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒலிம்பிக்கின் மங்கலச் சின்னங்களான ஃபூவாக்களை பற்றி அறிந்திருப்போம். அவற்றின் பின்னணியிலான சில பண்பாட்டு அம்சங்களை உங்களுக்கு இப்போது நான் அறியத்தருகிறேன்.

நட்பையும், அமைதியையும், உலகத்திற்கான சீனாவின் நல்வாழ்த்துக்களையும் தாங்கியதாய் அமைந்தன ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்கள் போன்ற ஐந்து ஃபூவாக்கள். பெய்ஜிங் ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ சின்னம் இந்த ஃபூவாக்கள்தான். ஒரேவிதமாய் ஒலிக்கும் இரட்டை அசை பெயர்களை கொண்ட இந்த ஐந்து பூவாக்கள், சீனாவில் பாரம்பரியமாக குழந்தைகளை பரிவும் அன்பும் ஒழுக அழைக்கும் தன்மையில் பெயரிடப்பட்டன. பெய்பெய் என்ற மீன், ஜிங்ஜிங் என்ற பாண்டா கரடி, ஹுவான் ஹுவான் என்ற நெருப்பு, யிங்யிங் என்ற திபெத்திய மான், நி நி என்ற குருவி ஆகியவற்றின் பெயர்களின் முதல் எழுத்தை ஒன்றாக சேர்த்து சொன்னால் பெய்ஜிங் ஹுவான் யிங் நி. அதாவது பெய்ஜிங் உங்களை வரவேற்கிறது. ஆக இந்த மங்கலச்சின்னங்களான ஃபூவாக்கள் பெய்ஜிங்கிற்கு வருகை தருமாறு மக்களை அழைக்கும் தூதுவர்களாகவும் அமைகின்றன. மேலும் இந்த ஃபூவாக்களின் படங்களை நீங்கள் பார்த்தால், அவை கடல், காடு, நெருப்பு, பூமி, வானம் ஆகிய ஐந்து கூறுகளை, மூலங்களை மிக அழகாக அவை வெளிப்படுத்துவதை காணலாம். பஞ்சபூதங்கள் எனும் இவற்றை சீனப் பாரம்பரிய, நாட்டுப்புறக்கலை வடிவம் மற்றும் அலங்காரத்தின் வெளிப்பாடாய் வடிவமைப்பு செய்துள்ளனர் ஃபூவாவின் வடிவமைப்பாளர்கள். சீனப் பாரம்பரிய பண்பாட்டுக்கலையில், மீனும், நீருமான வடிவங்கள் பொதுவாக செழுமையையும், விளைச்சலையும் உணர்த்துகின்றன.

திபெத்திய மான் மற்றும் குருவியின் வடிவிலான யிங்யிங் நிநி ஃபூவா பொம்மைகள் சீனாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பை உணர்த்துகின்றன. ஒலிம்பிக் தீபத்தையும், விளையாட்டு மீதான பேரார்வத்தையும் உணர்த்துகிறது ஹுவான்ஹுவான் ஃபூவா. பெய்பெய், ஜிங்ஜிங் இரண்டும் மகிழ்ச்சியையும், வளத்தையும் உணர்த்துகின்றன.


1 2 3