• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-28 17:07:58    
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் சீனத் தனிச்சிறப்புகள் அ

cri

நடனமாடும் பெய்ஜிங்

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இலச்சினை நடனமாடும் பெய்ஜிங். இது சீன முத்திரையின் வடிவில் உருவாக்கப்பட்டது. "சீன முத்திரை – நடனமாடும் பெய்ஜிங்" என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் இலச்சினை, ஒற்றை சீன எழுத்தால் செந்நிற முத்திரையால் உருவாக்கப்பட்டது. தூரிகையின் துணையோடு ஆங்கில எழுத்துக்களால் பெய்ஜிங் 2008 என்று எழுதப்பட்டிருந்தது. நீங்கள் அந்த இலச்சினையை பார்க்கும் போது ஒரு உருவம் நடனமாடுவது அல்லது ஓடுவது போல் இருப்பதை காணலாம். ச்சிங் என்ற சீன எழுத்தை போல் அமைந்திருந்தது அந்த உருவம். ச்சிங் என்றால் தமிழில் தலைநகரம் என்று பொருள். சீனா நடத்திய பெய்ஜிங் ஒலிம்பிக்கின் இலச்சினை அல்லது சின்னமான இந்த நடனமாடும் பெய்ஜிங், 3700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவில் நிலவிய முத்திரை அச்சு கலையம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்திருந்ததுதான் தனிச்சிறப்பு. நம்முடை நேயர்கள் பலர் கூட தங்களுடைய பெயர் முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் எனும் முத்திரை செய்து வைத்து பயன்படுத்துவது போல், இந்த சீன முத்திரையும் ஒரு நீண்டகால பாரம்பரிய செழுமை கொண்ட கலையாகும். தனி நபர்களும், அரசு அமைப்புகளும் அக்காலத்திலிருந்து இப்படி முத்திரைகளை பயன்படுத்தியுள்ளன, பயன்படுத்தி வருகின்றன. சீனப்பாரம்பரிய செழுமையும், விளையாட்டு உள்ளடக்கமும் கொண்டதாக அமைந்த நடனமாடும் பெய்ஜிங் சின்னத்தை கண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜேக்குஸ் ராக் "இளமையும், துடிப்பும் கொண்டு சீனாவின் வரலாற்றையும், பண்பாட்டுப் பாரம்பரிய செழுமையையும் எதிர்காலத்தோடு இணைத்ததாய் அமைந்த இலச்சினை என்று பாராட்டியதிலிருந்து இந்த உண்மை நமக்கு விளங்கும்.

1 2 3