• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-28 17:04:22    
பள்ளியில் பீக்கிங் இசை நாடக பாடம்

cri

தியேன் சின் மாநகரின் மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள xiang jiang dao எனும் துவக்க பள்ளியில் 5ம் ஆண்டு வகுப்பில் பீக்கிங் இசை நாடக பாடம் நடத்தப்படுகின்றது. ஆசிரியரின் வழிகாட்டலில் மாணவி pan xiao tong இசையுடன், hong niang எனும் பீக்கிங் இசை நாடகத்தின் பகுதியைப் பாட கற்றுக்கொண்டிருக்கின்றார். தான் 2 ஆண்டு காலமாக இந்த இசை நாடகத்தைக் கற்றுக்கொண்டுள்ளாதாக அவர் தெரிவித்தார். Pan xiao tong கூறியதாவது

பீக்கிங் இசை நாடகத்தைக் கற்றுக்கொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நாடகத்தின் பாடல்களை மிகவும் விரும்புகின்றேன். பாடம் கற்றுக்கொள்வதற்கு முன், ஆசிரியர் பாஃன் நாடகத்தின் கதையை எங்களுக்கு கூறுகின்றார். இந்தக் கதை எந்த நிலைமையில் நிகழந்தது என்பதை அறிந்து கொள்வது பீக்கிங் இசை நாடகத்தைச் சிறப்பாகப் புரிந்து கொண்டு கற்றுக்கொள்வதற்கு துணை புரிகின்றது என்றார் அவர்.

தியேன் சின் மாநகரம், சீன இசை நாடகங்களின் ஊராக அழைக்கப்படுகின்றது. இந்நகரில், பொது மக்கள் பலர் பீக்கிங் இசை நாடகத்தை விரும்புகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், மேற்கூறிய xiang jiang dao துவக்கப் பள்ளி, hong qiao பிரதேசத்து ஆய்வு துவக்கப் பள்ளி, nan kai இடைநிலை பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளின் இசை பாடத்தில் பீக்கிங் இசை நாடகப் பகுதி சேர்க்கப்பட்டது. 2005ம் ஆண்டு, xiang jiang dao துவக்கப் பள்ளியின் ஆசிரியர்கள் ஈர்ப்பு ஆற்றல் மிக்க சீன கலை செல்வம் என்ற பாட நூலை இயற்றி, பள்ளியில், பீக்கிங் இசை நாடகக் கல்வியை கற்பிக்கத் துவக்கினர். இந்த இசை நாடகத்தின் அடிப்படை அறிவு தொட்டு, சில எளிதான பாடல்களை அவர்கள் கற்பிக்கின்றனர். தற்போது, மாணவர்கள் இந்த இசை நாடகம் பற்றிய அறிவுகளை தெளிவாக அறிந்து கொண்டதுடன், பல நாடகங்களின் பாடல்களை பாடலாம். இசை ஆசிரியர் yang qiu yue அம்மையார் கூறியதாவது

துவக்க நிலையில், பாடம் வழங்கும் போது ஒளிதட்டு உள்ளிட்ட ஊடகங்களின் மூலம், மாணவர்களுக்கு பீக்கிங் இசை நாடகம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். மாணவர்களின் ஆர்வம் படிப்படியாக உயர்த்தப்படலாம் என்றார் அவர்.

1 2 3