 வட சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக வரவேற்கப்படும் ஒரு வகை நாட்டுப்புற நடனம் உள்ளது. அதுதான் யாங்கோ நடனம். முன்பு, வசந்த விழா வந்த போதெல்லாம், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் நாதமணி மற்றும் மேளம் கொட்டி, யாங்கோ நடனமாடினர். வசந்த விழாவின் சூழல் இதன் மூலம் உடனே கோலாகலமாகி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளில், கிராமப்புறத்தில் பரவலாக்கப்பட்ட யாங்கோ நடனம் நகரங்களில் மென்மேலும் பல மக்களின் வரவேற்பைப் பெற்று, அன்றாட உடற்பயிற்சியாக மாறியுள்ளது.

யாங்கோ நடனம், சீனாவில் நீண்ட வரலாறுடைய நாட்டுப்புற நடனங்களில் ஒன்றாகும். 800 ஆண்டுகளுக்கு முன்னதாக தெற்கு சுங் வம்சத்திலான ஆவணத்தில் யாங்கோ போன்ற கிராமப்புற நடனம் பற்றிய பதிவுகள் உள்ளன. சீனாவின் வட பகுதிகளில் பரவலாக்கப்பட்ட யாங்கோ நடனம், வேறுபட்ட பழக்கவழக்கங்களும் தனிச்சிறப்புகளும் உடையது.
1 2 3
|