
சில கிராமங்களில், யாங்கோ நடனம் பிரதிநிதித்துவம் வாய்ந்த விளையாட்டாகவும், பல நூறு ஆண்டுகள் நீடிக்கும் பாரம்பரியமாகவும் திகழ்கிறது. கிழக்கு சீனாவின் ஷான் துங் மாநிலத்தின் ஜியௌ சோ நகரில் தோன்றிய ஜியௌ சோ யாங்கோ மிகவும் புகழ்பெற்றது. இவ்வாண்டு சீனாவி்ன் முதலாவது யாங்கோ விழா ஜியௌ சோ நகரில் நடைபெற்றது.

யாங்கோ நடனம் உடல் நலத்துக்கு துணைபுரியும் என்பதால், நகரவாசிகளிடையில் அதன் மீது பேரார்வம் ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங்கைச் சேர்ந்த சோ வெய் துங் அம்மையாருக்கு வயது 54. அவர் வாழும் குடியிருப்புப் பகுதியில் யாங்கோ குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு இரவிலும், குடியிருப்புப் பகுதியிலுள்ள விசாலமான இடத்தில், சோ அம்மையார் போன்ற யாங்கோ குழுவினர் நடனமாடுகின்றனர். இது பற்றி அவர் கூறியதாவது—
"3 ஆண்டுகளுக்கு முன் யாங்கோ நடனமாடத் துவங்கினேன். இரவு உணவு சாப்பிட்ட பின், மற்றவருடன் இணைந்து யாங்கோ நடனமாடுகின்றேன். உடற்பயிற்சி செய்வதோடு எனது மனநிலையும் மகிழ்ச்சியாகிறது" என்றார் அவர். 1 2 3
|