வட பகுதி யாங்கோ நடனத்தில் 2 வகைகள் உள்ளன. ஒன்று, கால்களில் தாவு நடைக்கோல்களைக் கட்டி நடனமாடுவது, மற்றது, தரையில் யாங்கோ நடனமாடுவது. உடற்பயிற்சிக்கான யாங்கோ, தரையில் யாங்கோ நடனமாகும். தாவு நடைக்கோலில் யாங்கோ நடனமாடுவதற்கு கடும் பயிற்சி தேவை. தரையில் ஆடும் யாங்கோ ஒப்பீட்டளவில் எளிமையாக இருந்த போதிலும், நடனமாடும் போது எளிதானதல்ல. யாங்கோ நடனமாடுபவர் தெளிவான பங்கேற்று, வேறுபட்ட ஆடைகளை அணிந்து, மாறுபட்ட அபிநயங்களைச் வெளிப்படுகின்றனர். நாதமணி மற்றும் மேளத்தின் இசையோடு, சிலர் மென்மையாகவும் சிலர் கவர்ச்சிகரமாகவும் சிலர் நகைச்சுவையாகவும் நடனமாட வேண்டும். ரசிகர்களின் கைத்தட்டல் மற்றும் மகிழ்ச்சியான சிரிப்பொலியைப் பெற்றால், அது தலைசிறந்த அரங்கேற்றம் என கருதப்படலாம்.

ஆகவே, கோலாகலமான யாங்கோ நடனம், சீனர்கள் வசந்த விழாவைக் கொண்டாடும் போது இன்றியமையாத பொழுது போக்காக மாறிவிட்டது. பல ஆண்டுகளாக யாங்கோ நடனமாடியுள்ள திரு பேங் துவான் யாங் கூறியதாவது—
"நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான யாங்கோ, நாற்று நடுவதிலிருந்து வருகிறது. வயலை உழுது நாற்று நடும் போது சோர்வை நீக்க விவசாயிகள் பாடல் பாடுவார்கள். இதிலிருந்தே யாங்கோ பாடல் பிறந்தது. பின்னர் நாற்று நடும் செயல்கள் சேர்க்கப்பட்டு, யாங்கோ ஆடல் பாடல் தோன்றியது" என்றார் அவர்.
1 2 3
|