வியாபாரத்தில் புதுமை


வியாபாரத்தில் முன்னேற வேண்டுமா? புதிய முறைகளையும், புதுமைகளையும் புகுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும். கோழி வளர்ப்பில் புதுமை புகுத்தி நல்ல இலாபம் பெற்று வருகிறார் தென் சீனாவின் Jiangxi மாநிலத்தை சேர்ந்த கோழிப்பண்ணை முதலாளி ஒருவர். இவர் 30 வகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மதுவை ஏழு திங்கள் காலம் கோழிகளுக்கு ஊட்டி வளர்ப்பது தான் புதுமை. இவ்வாறு வளர்க்கப்பட்ட கோழிகள் கிலோவுக்கு 64 முதல் 776 யுவான் வரை விற்கப்படுகின்றன. இவ்வகை கோழி இறைச்சி சொகுசுமிக்க நட்சத்திர உணவகங்களுக்கு அதிகமாக விற்கப்படுவதால், அதிகமான இலாபம் கிடைக்கிறது. தனித்தன்மை வாய்ந்த சுவையாலும், மருத்துவ குணங்களாலும் இக்கோழி இறைச்சி அனைவராலும் விரும்பப்படுகிறது.
1 2 3
|