ஆண்களுக்கும் அழகு சாதனப் பொருட்கள்

பெண்களுக்கான அழகு சாதனப்பொருட்களுக்கு குறைவில்லை. அவற்றை பயன்பபடுத்தினால் தான் அழகு என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. நகர்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் பெண்கள் இவற்றை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். நகத்திற்கு அழகு செய்ய வேண்டுமா? நகத்தை நீளமாக வளர்த்த பின்னர் அதற்கு சாயம் பூச வேண்டும் என்றில்லை. செயற்கையாக நகத்தை ஒட்டி அழகு படுத்திக்கொள்ளலாம். ஆனால் காலம் மாறி வருகிறது. இனிமேல் ஆண்களும் இவ்வாறு அழகு சாதனப்பொருட்களை பூசிக்கொள்ளலாம். ஆண்களுக்கென்று சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள அழகு சாதனப்பொருட்கள் பிரிட்டனில் தற்போது விற்கப்படுகின்றன. ஆண்களுக்கான கண் மற்றும் கண்ணிமை பூச்சுக்கள் தயாரிக்கப்ட்டு விற்பனைக்கு உள்ளன. அழகு சாதனப்பொருட்கள் பெண்களுக்கும், பாலின மாற்றம் பெற்றவர்களுக்கும் உரியது மட்டுமல்ல. தங்களுடைய தோற்றத்தின் அழகை எப்போதும் புதுப்பொலிவுடன்வைத்து கொள்ள விரும்பும் எல்லா ஆண்களும் இவற்றை விரும்புவர் என்கிறார் அந்நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ஜெப் வெம்யஸ். வேலைக்கு செல்லும் தனது மகனிடம் தாய், டேய்! கைண்ணுமைய சரியா பூசிக்கிட்டு போடா.. என்று அறிவுறுத்தும் காலம் வெகு தொலைவில்லை. 1 2 3
|