• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Sunday    may 4th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-06 10:51:23    
வியாபாரத்தில் புதுமை

cri

உடல் பருமன் ஒழிய

அதிக மக்கள் உடல் பருமன் அடைவது அமெரிக்கா போன்ற சில வளர்ந்த நாடுகளில் பெரும் அறைகூவலாக எழுந்துவருகிறது. உடல் பருமனுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எல்லா உணவகங்களிலும் வழங்கப்படும் உணவின் பொதிகளில் விலை அச்சிடப்பட்டுள்ள இடத்திற்கருகில் அவ்வுணவின் கலோரி அளவையும் குறிப்பிட வேண்டுமென்று நியூயார்க்கில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம் ஏறக்குறைய 2000 உணவகங்களை பாதிக்கும் என்று தெரிகிறது. இதனை நிறைவேற்றாத உணவகங்களுக்கு 200 முதல் 2000 அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது.

சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் 2400 கலோரிகளை கணக்கிட்டு உணவு உட்கொண்டால் உடல் பருமனை எளிதாக குறைக்கலாம் என்ற கொள்கை அடிப்படையில் தான் இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் 1,50,000 பேர் உடல் பருமன் அடைவதிலிருந்தும், 30,000 பேர் நீரிழிவு நோய் பெறுவதிலிருந்தும் தடுக்கப்படுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதி, மக்களின் நுகர்வு பழக்கவழக்கங்களில் ஆழமான பாதிப்புகளை உருவாக்காது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040