• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-17 18:26:46    
ஒலியை பார்க்கலாமா? – பகுதி II

cri

இது பற்றிய ஆய்விற்கு அறிவியலாளர்கள் குரங்குகளை பயன்படுத்தினர். திரை ஒன்றில் காட்டப்படும் ஒளியை அறியும் விதமாக குரங்குகளை பழக்கப்படுத்தினர். திரையில் ஒளி அதிகமாக விழும்போது குரங்குகள் அதனை மிக எளிதாக கண்டுகொண்டன. ஒளி குறைவாக இருந்தபோது அதனை கண்டுகொள்ள அதிக நேரம் எடுத்தன. ஆனால் அவ்வாறு மங்கிய ஒளியோடு இணைத்து சிறிய ஒலியை எழுப்பினால் குரங்குகள் உடனடியாக, மிக விரைவாக மங்கிருந்த ஒளியை கண்டுபிடித்துவிட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில், ஒளி தகவலை மூளை பெற்றுக்கொள்வதோடு தொடர்புடைய 49 மூளை நரம்புகளில் ஏற்பட்டிருந்த பதிவுகள்படி, மங்கிய ஒலியோடு இணைந்து ஒலி எழுப்பப்பட்டபோது மூளையின் செயல்பாடு மிகவும் விரைவாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதுபோன்று ஒலியை கேட்டவுடன், கண்ணால் பார்த்து பதிலளிப்பது போன்று மிக விரைவாக செயல்படுவதை காது மற்றும் கண் தொடர்புடைய மூளைப்பகுதிகளால் மட்டுமே விளக்க முடியும் என்கிறார் Houston னிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் Ye Wang . இந்த ஆய்வை பற்றி கூறுகின்றபோது கேட்கும் திறன் மாற்று புலனுணர்வை தூண்ட முடியும் என்பதற்கு சாட்சியாக உள்ளது என்று பிரான்ஸின் Toulouse லுள்ள Paul Sabatier பல்கலைக்கழகத்தின் தலைமை ஆய்வாளர் Pascal Barone தெரிவித்தார்.

1 2 3