• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-17 18:26:46    
ஒலியை பார்க்கலாமா? – பகுதி II

cri

அதாவது காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். புலி உருமுகின்ற சத்தம் கேட்டால் போதும், அதனை பார்க்காமலேயே அவ்விடத்தைவிட்டு மறைந்திருப்போம் தானே. அதேபோல சாலையில் சென்று கொண்டிருக்கும்போது பேருந்து ஒலி எழுப்பப்பட்டால் திரும்பி பார்க்காமல் அடுத்த வினாடியே ஓரமாக செல்ல மாட்டோமா? இவை பார்வையின் இடத்தை ஒலி தனதாக்கி கொண்டு விரைவாக செயல்படும் விதத்தை குறிக்கின்றது. ஏதாவது ஒன்றை பார்க்கின்றபோது ஒளி மங்கலாக இருந்தால் காதுகள் அந்த வெற்றிடத்தை நிரப்பி பார்வை மண்டலத்தை தூண்டுகின்றன என்பது Barone வாதமாகும்.

உணர்வறிதலில், சினஸ்தேசியா என்ற கலப்பு உணர்வுகளின் நிலை கொண்டவர்கள் உள்ளனர். அதாவது அத்தகைய உணர்நிலை பெற்றிருப்பவர்கள் கேட்பதை பார்ப்பதாகவும், வண்ணங்களை உணர்வதாகவும் அனுபவம் கொள்வர். இந்நிலை பல உணர்வுகளின் கலப்பால் உருவாகின்றது. அப்படியான உணர்வுகளின் கலப்பு நிலை தான் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதா? என்றால் இல்லை. சினஸ்தேசியா என்பது எல்லா புலன்களின் கலப்பால் உருவாகின்ற நிலை. ஆனால் இவ்வாய்வில் விவரிக்கப்படுவதோ ஒரு புலனால் முடியாத போது இன்னொரு புலன் செயல்பட்டு உணர்வறிதலை முழுமையடைய செய்வதாகும். ஆனால் வண்ணத்தையோ, எழுத்தையோ, வடிவத்தையோ சொன்னவுடன் அதனை இயல்பாக பார்த்து அனுபவிக்கும் திறன் கொண்டிருப்பததை தான் சினஸ்தேசியா என்கின்றனர்.

1 2 3