• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-18 21:34:28    
கோடைகாலத்தில் நோய் தொற்றுயிரிகள் தடுப்பு

cri

கோடைகாலம், கொசு, ஈ, கரப்பான்பூச்சி, எலி முதலிய மனிதரில் நோய் பரவலுக்குக் காரணங்களான உயிரினங்கள் விறுவிறுப்பாக செயல்படும் காலக்கட்டமாகும். மருத்துவ மற்றும் உயிரியலில் அவை நோய் தொற்றுயிரிகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நோய் தொற்றுயிரிகளால் பாதிக்கப்படாமல் தவிர்க்கும் வகையிலும், எதிர்பாராத தொற்று நோய் நிகழ்வு மற்றும் பரவலின் பாதிப்பை கூடிய அளவில் குறைக்கும் வகையிலும், சீன சுகாதார வாரியங்கள் மிக விவரமான திட்டத்தை வகுத்து, மிக துல்லியமாக ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

கொசு, ஈ, கரப்பான்பூச்சி, எலி முதலிய உயிரினங்கள், எலி காய்ச்சல், dengue காய்ச்சல் முதலிய தொற்று நோய்களைப் பரவல் செய்பவை. அது மட்டுமல்ல, அவை கடித்தால், விளையாட்டு வீரர்களின் விளையாடும் திறனையும் ஓய்வையும் ஓரளவு பாதிக்கும். ஆகையால், ஒலிம்பிக் விளையாட்டு்ப் போட்டிகளை நடத்தும் நகரங்களில் நோய் தொற்றுயிரிகளைக் கட்டுப்படுத்தும் நிலைமை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பயனுடன் தொடர்புடையது. சீன சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறையின் தலைவர் qi xiao qiu கூறியதாவது

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் போது, மிகப் பல விளையாட்டு வீரர்களும், பயிற்சி அளிப்பவர்களும், செய்தியாளர்களும், சுமார் 6 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகளும் சீனாவுக்கு வரவுள்ளனர். அதேவேளையில், உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தை எட்டக்கூடும். சீனப் பொது சுகாதார பாதுகாப்புப் பணிக்கு இது மாபெரும் நிர்பந்தம் கொண்டு வரும். ஆகையால், நோய் தொற்றுயிரிகள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியை வலுப்படுத்துவது, குறிப்பாக, நோய் தொற்றுயிரிகளைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவாத ஆற்றலையும் தொழில் நுட்ப தரத்தையும் உயர்த்துவது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு மிக முக்கியமானது என்றார் அவர்.

1 2 3