
பெய்ஜிங் சுகாதார வாரியங்கள் கட்டியமைக்கப்பட்ட 31 ஒலிம்பிக் விளையாட்டு அரங்கள் மற்றும் திடல்களைப் பரிசோதித்துள்ளன. மேலும், சுகாதார வாரியங்கள் பூச்சி மற்றும் எலி கொல்லி மருந்துகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான, உயர் பயன் கொண்டுள்ள 13 தொழில் சாலைகளின் சுமார் 30 உற்பத்தி பொருட்களைச் சிறப்பாக தேர்ந்தெடுத்துள்ளன.
பெய்ஜிங் சுகாதார வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி sun xian li கூறியதாவது
வெற்றிகரமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு உறுதியான உத்தரவாதம் அளிக்கும் வகையில், இவ்வாண்டு பெய்ஜிங்கில் முக்கியமாக மக்களிடையில் பரவலாக பிரச்சாரம் செய்து, நோய் தொற்றுயிரிகள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, அவற்றின் எண்ணிக்கையைப் பயனுள்ள முறையில் குறைக்க வேண்டும் என்றார் அவர்.
பெய்ஜிங் நகரைத் தவிர, சின் தாவ், சென் யாங் முதலிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் 5 நகரங்களிலும், குவாங் சோ, சென் சென் முதலிய 33 முக்கிய சுற்றுலா நகரங்களிலும் அதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிய வருகின்றது 1 2 3
|