• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-18 21:34:28    
கோடைகாலத்தில் நோய் தொற்றுயிரிகள் தடுப்பு

cri

2005ம் ஆண்டு முதல், பெய்ஜிங் மாநகரின் சுகாதார வாரியங்கள், பன்முகங்களிலும் ஒழுங்காகவும், முக்கிய தொழில் மற்றும் இடங்களில், குறிப்பாக, ஒலிம்பிக் திடல்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள், அவற்றின் அருகிலுள்ள பிரதேசங்கள் ஆகியவற்றில் நோய் தொற்றுயிரிகளின் பரவலைக் கண்காணிக்க துவங்கியுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, அவற்றால் ஏற்பட கூடிய பொது சுகாதார சம்பவங்களின் சாத்திய கூறு மற்றும் பாதிப்பு அளவின் மீது மதிப்பீடு செய்துள்ளது.

அதன் அடிப்படையில், சிட்னி மற்றும் எதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நோய் தொற்றுயிரிகளைத் தடுத்து கட்டுப்படுத்திய வெற்றிகரமான அனுபவங்களைப் பெய்ஜிங் கற்றுக்கொண்டு, சுகாதார ஒலிம்பிக் -- நோய் தொற்றுயிரிகள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. பெய்ஜிங் மாநகர நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவர் zeng xiao peng கூறியதாவது

இந்தச் செயல் திட்டம் 3 குறிக்கோள்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, முழு நகரிலுள்ள நோய் தொற்றுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இராண்டாவதாக, நோய் தொற்றுயிரிகள் மூலம் பரவல் செய்யப்படும் தொற்று நோயின் அபாயத்தைக் கூடிய அளவில் குறைக்க வேண்டும். முன்றாவதாக, ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுடன் தொடர்புடைய இடங்களின் நிலைமை, தேசிய வரையறையை எட்ட அல்லது தாண்ட செய்ய வேண்டும். தற்போது, பெரும்பாலான குறிக்கோள்கள் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.

1 2 3