• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-19 09:32:31    
சீன-தென் கொரிய பொருளாதார, பண்பாட்டுப் பரிமாற்றத்தில் ஈடுபடும் Cho Sung Hye அம்மையார்

cri

தென் கொரிய நாட்டவர் Cho Sung Hye அம்மையாருக்கு வயது 50. கடந்த 12 ஆண்டுகளாக, சீனாவின் நடுப்பகுதியில் உள்ள An Hui மாநிலத்தின் தலைநகரான He Fei நகரில் அவர் வாழ்ந்து வருகின்றார். இக்காலத்தில் சீன-தென் கொரிய பொருளாதார வர்த்தகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரைவுபடுத்த அவர் முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.

சீனாவுக்கு வருவதற்கு முன், அவர் ஒரு பாலர் பள்ளித் தலைவராக இருந்தார். அவரது கணவர், ஒரு கணிணி கடையில் அலுவல் செய்தார். வாழ்க்கை நன்றாக இருந்த போதிலும், 1996ஆம் ஆண்டு, He Fei நகருக்கு குடிபெயர Cho Sung Hye அம்மையாரின் குடும்பத்தினர் அனைவரும் முடிவு செய்தனர்.

அப்போது தென் கொரிய நாட்டவர் பலர், சீனாவின் கடலோர நகரங்களுக்குச் செல்ல விரும்பினர். ஆனால், தாங்கள் தங்களது மகனின் யோசனை படி, He Fei நகரை தெரிவு செய்ததாக Cho Sung Hye அம்மையார் கூறினார். உள்ளூர் பல்கலைக்கழகம் ஒன்றில் தென் கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர்களாக அவரும் அவரது கணவரும் மாறினர். அவர் கூறியதாவது:

"He Fei நகருக்கும் சீனாவின் இதர நகரங்களுக்குமிடை போக்குவரத்து வசதியாக இருக்கிறது. தவிர, He Fei நகரில் அறிவியல் தொழில் நுட்பம் ரீதியான வலிமை அதிகம். பண்டைக்காலம் தொட்டு, இங்கு திறமைசாலிகளும் முக்கிய பிரமுகர்களும் தலைமுறை தலைமுறையாக தோன்றியுள்ளனர். இதற்கிடையில் உள்ளூர் சந்தையில், பொருட்களின் விலையும் மலிவு. பல்வேறு கோணங்களிலிருந்து பார்த்தால், வளர்ச்சிக்கான உள்ளார்ந்த ஆற்றல் இந்நகருக்கு உண்டு" என்றார், அவர்.

1 2 3