
சீனாவில் குடிபெயர்ந்த துவக்கத்தில், சீனர்களுடன் உரையாடுவதில் Cho Sung Hye அம்மையாருக்கு மொழி தடை இருந்தது. வாழ்க்கை பழக்க வழக்கங்களில் வேறுபாடு தோன்றியது. Cho Sung Hye அம்மையாரைப் பொறுத்த வரை இவை மிகப் பெரிய இன்னல்களாகும். எனவே, அவர், தனது குடும்பத்தினருடன் இணைந்து சீன மொழியைக் கற்றுக்கொள்ள தொடங்கினார். இதற்கிடையில், அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அவர் கூறியதாவது:
"தென் கொரிய நாட்டில் வேளாண் பொருட்கள், அன்றாட தேவை பொருட்கள் உள்ளிட்ட சீனப் பொருட்களை வாங்கலாம். சீனாவிலும் அது போல தென் கொரிய பொருட்களை வாங்க வேண்டும் என்று விரும்பினேன்" என்றார், அவர்.
"He Fei நகரில் "தென் கொரிய பொருட்கள் நகரை" நிறுவி, இதில் He Fei நகரவாசிகள் தென் கொரிய அலங்காரப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், உணவு வகைகள் ஆகியவற்றை வாங்கலாம்" என்ற எண்ணத்தை Cho Sung Hye அம்மையார் விரைவில் செயல்படுத்தினார். ஒரு புறம், He Fei நகரின் தொடர்புடைய வாரியத்துடன் அவர் தொடர்பு கொண்டார். மறு புறம், He Fei நகரின் வணிகர்களுக்கும், தென் கொரிய வணிகர்களுக்குமிடை மேடையை உருவாக்கும் பொருட்டு, பல தென் கொரிய தொழில் நிறுவனங்களுடன் அவர் தொடர்பு கொண்டார்.
1 2 3
|