• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-19 09:32:31    
சீன-தென் கொரிய பொருளாதார, பண்பாட்டுப் பரிமாற்றத்தில் ஈடுபடும் Cho Sung Hye அம்மையார்

cri

கடந்த ஆண்டு, Cho Sung Hye அம்மையாரின் முயற்சியுடன், முதலாவது தென் கொரிய பொருட்கள் நகர் He Fei நகரில் திறந்து வைக்கப்பட்டது. இதன் நிர்வாக மேலாளர் Shi அம்மையார் செய்தியாளரிடம் பேசுகையில், பல்வகை தென் கொரிய ஆடைகள், அலங்காரப் பொருட்கள், உணவகங்கள் இந்த தென் கொரிய பொருட்கள் நகரில் இடம்பெறுகின்றன என்றார். இது He Fei நகரில் தங்கியிருக்கும் தென் கொரிய நாட்டவர்களுக்கு வசதியாக அமையும் அதே வேளையில், அதிகப்படியான சீன நுகர்வோர்களையும் ஈர்க்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

தென் கொரிய பொருட்கள் நகரில் Li Xiu Yun என்னும் வாடிக்கையாளர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

"தென் கொரிய பொருட்கள் நகரின் சூழல் நன்றாக இருக்கிறது. இவ்விடம் அழகாக இருக்கிறது. தென் கொரிய பொருட்கள் நவநாகரீகமானவை. விலையும் மலிவு" என்றார், அவர்.

தென் கொரிய பொருட்கள் நகர் திட்டப்பணி, மாபெரும் பொருளாதார பயனைத் தர முடியும். இது மட்டுமல்ல, சீன-தென் கொரிய பண்பாட்டுத் தொடர்பை பெரிதும் தூண்டும் என்று Cho Sung Hye அம்மையார் கருதுகின்றார்.

சீன-தென் கொரிய பண்பாடு மற்றும் கல்வி தொடர்பைத் தூண்டுவதில் Cho Sung Hye அம்மையார் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றார். அவரது முயற்சியுடன், He Fei நகரில் பல பத்து துவக்கப் பள்ளிகள் மற்றும் இடை நிலை பள்ளிகளும், தென் கொரிய நாட்டின் பள்ளிகளும் சகோதரி பள்ளிகளாக மாறியுள்ளன. An Hui பாரம்பரிய சீன மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள், தென் கொரிய பல்கலைக்கழகத்துடன் நட்புறவை உருவாக்கியுள்ளன.

இதன் விளைவாக, 2002ஆம் ஆண்டு Cho Sung Hye அம்மையாருக்கு நட்புறவு விருது வழங்கப்பட்டது. சீனாவின் நவீனக் கட்டுமானம், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி ஆகியவற்றில் தலைசிறந்த பங்காற்றியுள்ள அன்னிய நிபுணர்களைப் பாராட்டுவதற்காக சீன அரசு உருவாக்கிய உயர் விருது இதுவாகும். தவிர, 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபம் ஏந்துபவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன், Cho Sung Hye அம்மையாரின் மூத்த மகன் Peking பல்கலைக்கழகத்தின் சீன மொழித் துறை படிப்பை முடித்த பிறகு, He Fei நகர் திரும்பினார். இப்போது ஒரு நிறுவனத்தில் சீன-தென் கொரிய பரிமாற்றம் தொடர்பான பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது அவரது இளைய மகன் He Fei நகரில் உள்ள ஒரு பாரம்பரிய சீன மருத்துவக் கல்லூரியில் அக்குபஞ்க்சர் மற்றும் மூலிகைப் புகை மருத்துவம் பற்றிய கல்வி பயில்கின்றார். கடந்த சில ஆண்டுகளில், Cho Sung Hye அம்மையாரும் அவரது குடும்பத்தினரும் He Fei நகரின் வேகமான வளர்ச்சியை நேரடியாக கண்டுள்ளனர்.

தனது குடும்பத்தினர் சீனப் பண்பாட்டை நேசிப்பதாகவும், உள்ளூர் சிற்றுண்டி, சீனாவின் பாப் இசை பாடல்கள், Kungfu திரைப்படங்கள் ஆகியவற்றை விரும்புவதாகவும் Cho Sung Hye அம்மையார் கூறினார். சில சமயங்களில், தமது குடும்பத்தினர் ஊறுகாய் தயாரித்து, சீன நண்பர்களுக்கு வழங்கி உபசரிக்கின்றனர் என்றும் அவர் கூறினார். He Fei நகர், தமது இரண்டாவது பிறந்த ஊராக மாறியுள்ளது என்று அவர் கருதுகின்றார்.


1 2 3