நனவாகும் கனவுகள்

"விண்வெளியில் பறக்க கனவு காண்கின்றேன். அப்போது பூமியை மிக தெளிவாக பார்த்து தெரிந்துகொள்ள முடியும்". விண்வெளியில் நடந்த முதல் சீனா விண்வெளி வீரரான Zhai Zhigang நடுநிலைப் பள்ளியில் படித்தபோது எழுதிய சொற்றொடர் தான் இது. முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவரது கனவு நனவாகியுள்ளது. 2008 செப்டம்பர் 27 ஆம் நாள் அவருடைய கனவை நனவாக்கி வரலாறு படைத்துள்ளார். தனது வெற்றியை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன தனது தாயோடு இணைந்து மகிழ முடியவில்லையே என தெரிவிக்கும் அவர், தனது கனவை நனவாக்க தொடர்ந்து முயன்று, முன்னேறி சாதித்தவராவார். ஒருவருடைய எண்ணங்கள் எப்படியோ, அப்படியே அவர் உருவாகிறார். உயர்வான கனவுகளை காண்போம். அவற்றை நனவாக்க வாழ்வில் தொடர்ந்து முயல்வோம்.
1 2 3
|