• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-20 16:05:22    
நனவாகும் கனவுகள்

cri

உலகப்புகழை தேடி

Huang Yangguang தென் சீனாவின் Guangxi Zhuang தன்னாட்சி பிரதேசத்தை சார்ந்தவர். அவர் தனக்கு 5 வயதாக இருந்தபோது ஏற்பட்ட மின்சார விபத்தால் இரண்டு கைகளையும் இழந்தார். வளர்ந்தபோது காலால் எழுதவும், வண்ணமடிக்கவும், மிதிவண்டி ஓட்டவும், மரம் செடி கொடிகளை காலால் நடவும் கற்றுக்கொண்டார். பிறரைபோல தாமும் சாதாரணமான வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை தான் இவ்வாறு அவரை செயல்பட செய்தது. இப்போது 31 வயது இளைஞராகயுள்ள அவர், சீன உடல் சவாலுடையோர் கலைக்குழுவில் முன்னணி நடனக் கலைஞராக உலாவருகிறார். செப்டெம்பர் 6 ஆம் நாள் பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்கவிழாவில் இக்கலைக்குழு அரங்கேற்றிய நிகழ்ச்சிகள் உலகளவில் புகழப்பட்டன. கண்பார்வையற்ற, வாய்பேச முடியாத, காதுகேளாத, சில உடல்உறுப்புகளற்ற அனைவரின் கலைத்திறன்களும் ஒருங்கிணைக்கப்பட்டால் மிக அருமையான ஆற்றல் வெளிப்படும் என்பதற்கு சீன உடல் சவாலுடையோர் கலைக்குழு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறலாம்.

தொடர்ந்து ஜப்பானில் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 16 நகரங்களில் 28 நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்திவுள்ளனர். அக்டோபரில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ உள்பட பல நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அக்டோபர் 22 ஆம் நாளுக்கு பின்னர் போர்ச்சுக்கல், மொராக்கோ, அல்ஜீரியா, ஐக்கிய அரபு நாடுகளில் தங்களது கலைநிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். உலகமே போன்றும் வகையில் அமைந்துள்ள இந்த கலைநிகழ்ச்சி உடல் சவால்களோடு மேற்கொள்ளப்பட்ட கடுமையான பயிற்சியால் உருவானது. அயரா முயற்சிகளாலும், சளையா பயிற்சிகளாலும் தொழில்முறை கலைஞர்களாக இவர்கள் உலாவருகிறாகள். "எனது கனவு" என்ற அவர்களது கலைநிகழ்ச்சி உடல்சவாலுடையோர் நனவாக்க நினைக்கும் அழகான உலகை நமது கண்முன் நிறுத்துகிறது.

1 2 3