104வது சீன ஏற்றுமதி இறக்குமதி பொருட்காட்சி, அக்டோபர் திங்களில் தெற்கு சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்றது. 1957ம் ஆண்டில் முதலில் துவங்கிய இப்பொருட்காட்சி, ஒவ்வொரு வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலுமாக நடைபெறுகிறது. இது, சீன வரலாற்றில் மிக நீண்டாகாலம் நீடித்து, மிகப் பெரியளவில் நடைபெறும் பன்நோக்கு சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியாகும். இது, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் வெளிப்பாடாக அழைக்கப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில், இப்பொருட்காட்சியின் வளர்ச்சிப் போக்கு மூலம், சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் வளர்ச்சிப் பாதையை அறிகிறோம்.
1957ம் ஆண்டில் இப்பொருட்காட்சி துவங்கிய போது, நவசீனா நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தது. மேலை நாடுகள் சீனப் பொருளாதாரம் மீது முற்றுகை மேற்கொண்டன. இப்பின்னணியில் துவங்கிய இந்தப் பொருட்காட்சி, சிறப்பான முக்கியத்துவத்தையும் கடமையையும் கொண்டது என்று சர்வதேச வர்த்தக ஆய்வு நிபுணர் mei xinyu கூறினார். அவர் கூறியதாவது,
சர்வதேசச் சந்தையில் நுழைந்து வெளிநாட்டு வர்த்தகத்தை வளர்ப்பதற்கு ஒரு வாயிலை உருவாக்கும் வகையில், சீன எற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பொருட்காட்சி நிறுவப்பட்டது என்றார் அவர்.
1 2 3
|