• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-24 12:25:08    
சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் மாற்றம்

cri

சீன ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பொருட்காட்சியின் மாற்றம், சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் மாற்றத்தை வெளிப்படுத்தியது. இந்த மாற்றம், பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார அதிகரிப்பு வழி முறைகளை சீனா மாற்றுவதற்கு ஏற்றதாகவுள்ளது mei yuxin கூறினார்.

ஆரம்ப நிலை ஆக்கப்பொருட்களை ஏற்றுமதி செய்து, உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வது, சீனாவின் முந்தைய வர்த்தகக் கட்டமைப்பாகும். தற்போது, உற்பத்திப் பொருட்களை, குறிப்பாக, இயந்திரங்களை முக்கியமாக ஏற்றுமதி செய்கின்ற கட்டமைப்பு நிலவுகிறது. அதாவது, சீனாவின் வர்த்தகக் கட்டமைப்பு, மென்மேலும் தொழிற்துறைமயமாக்க நாட்டை போல் மாறியுள்ளது என்றார் அவர்.

தவிரவும், இப்பொருட்காட்சியில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்கள் பெரிதும் மாற்றமடைந்துள்ளன. 1999ம் ஆண்டு, அரசு சாரா தொழில் நிறுவனங்கள், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள தகுநிலை பெற்றன. இவ்வாண்டின் வசந்த கால பொருட்காட்சியில், இத்தகைய தொழில் நிறுவனங்களின் வர்த்தகத் தொகை, 2200 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. இது, மொத்த வர்த்தகத் தொகையில் பாதிக்கு மேல் வகித்தது. 10 ஆண்டுகளுக்குள், அரசு சாரா தொழில் நிறுவனங்கள், இப்பொருட்காட்சியின் முக்கிய பகுதியாக மாறியுள்ளன.


1 2 3