அவர் கூறியதை போல, இப்பொருட்காட்சி, சீனா, வெளிநாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கான கதவைத் திறந்தது. 1957ம் ஆண்டு முதன்முறையாக பொருட்காட்சி நடைபெற்ற போது, 1200 வெளிநாட்டு வணிகர்கள் அதி்ல் கலந்து கொண்டனர். இவ்வாண்டின் வசந்த காலப் பொருட்காட்சியின் போது, இந்த எண்ணிக்கை, 1 இலட்சத்து 90 ஆயிரத்தைத் தாண்டியது. ஏற்றுமதி வர்த்தகத் தொகை, 3820 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. அதே வேளையில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை, 1957ம் ஆண்டில் இருந்த 310 கோடியிலிருந்து கடந்த ஆண்டின் 200 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு அதிகரித்துள்ளது.

wen songyang என்ற வணிகர், 86 முறைகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இப்பொருட்காட்சியில் சீன ஏற்றுமதி பொருட்களின் கட்டமைப்பு, முந்தைய ஒற்றை மற்றும் ஆரம்ப நிலை உற்பத்திப் பொருட்களை முக்கியமாக கொண்ட வர்த்தகக் கட்டமைப்பிலிருந்து தற்போதைய பல தரப்பட்டதாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது, விண்வெளி உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட எண்ணெய், வேதியியல், இயற்கை எரிவாயு முதலிய பொருட்களும் இப்பொருட்காட்சியில் காணப்படுகின்றன. பல உயர் அறிவியல் தொழில் நுட்ப ஆக்கப் பொருட்களும் இடம்பெறுகின்றன என்றார் அவர்.
1 2 3
|