 தென்மேற்கு சீனாவிலுள்ள யுன் நான் மாநிலத்தின் தி ச்சிங் திபெத் தன்னாட்சிச் சோவில், உலகில் புகழ்பெற்ற, அழகான இடமான Shangrila இருக்கிறது. மனிதகுலத்தின் சொர்க்கமாக அழைக்கப்படும் Shangrila, எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அதன் சுற்றுலாப் பொருளாதாரம் இடைவிடாமல் வளர்வதுடன், Shangrila திபெத் பிரதேசத்தின் மிக செழுமையான இடங்களில் ஒன்றாகி வருகிறது.
திபெத் இன விவசாயி qilinpeichuஉம், கிராமங்களிலுள்ள பிற விவசாயிகளும், மலை காட்டை சுற்றி வந்து காவல் செய்வது, தீ விபத்து மற்றும் சட்டத்தை மீறிய வேட்டையாடுதலை தடுப்பது முதலிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கடமைகளை நாள்தோறும் மேற்கொள்கின்றனர். Qilinpeichu கூறியதாவது,
நாங்கள் இங்குள்ள குப்பைகளை சேகரித்து, மரம் வெட்டுவது, வேட்டையாடுவது ஆகியவற்றைத் தடுத்து, மலையைப் பாதுகாப்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறோம் என்றார் அவர்.
1 2 3 4
|