
அவர், Shangrila மாவட்டத்தின் pudacuo தேசியப் பூங்காவிலுள்ள luorong கிராமத்தில் வாழ்கின்றார். இங்கு, ஆதிகால காடு, பள்ளத்தாக்கு, ஏரி, அரிய விலங்குகள், செழுமையான தாவரங்கள் முதலியவை, உள்ளன.
இருப்பினும், 1998ம் ஆண்டுக்கு முன், Shangrilaவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டோர், எவருமில்லை. பெரும்பாலான ஆதிகால காடுகளின் மரங்கள் வெட்டப்பட்டு, புல்வெளி சீர்குலைக்கப்பட்டு, நிலச்சரிவு, மண் அரிப்பு முதலிய இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. இயற்கைச் சீற்றங்களைச் சமாளித்து, உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பதற்காக, சீன அரசு, கட்டுப்பாடின்றி மரங்கள் வெட்டுவதைத் தடுத்தது. அத்தோடு விளை நிலத்தை மீண்டும் காடுகளாக மாற்றுவது, மரங்கள் நடுவது, மாற்று எரியாற்றலை வளர்ப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலான முயற்சியின் மூலம், Shangrilaவின் இயற்கை மூலவளம், பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.
1 2 3 4
|