• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-02 15:59:04    
சீனாவின் வேறு சில பெயர்கள்

cri

ஜியுஷோ (Jiuzhou)

முன்னர் குறிப்பிட்டபடி தாயு வெள்ளத்தை எதிர்த்து போராடி வென்றபின் 9 நிர்வாகப் பிரதேசங்களாக பிரித்தாராம். ச்சி, யான், ச்சிங், ஜிங், யாங், லியாங், யோங், ஷுன் மற்றும் யு என்பவையே தாயு பிரித்த 9 பிரதேசங்கள். நில சீர்த்திருத்தம் எனப் பொருள்படும், பண்டைய நூலான ஹுவய்நான்சுவில், சீன 9 நிர்வாக அல்லது ஆளுகை பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அவை ஷென்ஷோ, ஸுஷோ, ரொங்ஷோ, சுஷோ, ஜிஷோ, டாய்ஷோ, போஷோ, யாங்ஷோ முதலியவை. ஆக 9 நிர்வாகப் பிரதேசங்களென பொருள்படும் ஜியுஷோ என்று சீனாவை அழைத்தனர். மேலும், சீன மொழியில் ஜியு என்பது 9, ஆக சீனாவை ஜியுஷோ என்றுமட்டுமன்றி, ஜியுயு, ஜியுயோ, ஜியுது, ஜியுச்சு என்றும் அழைத்தனராம்.

ஹாய்னெய் (Hainei)

பண்டைக்காலத்தில் சீன மக்கள் சீனா அனைத்து பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நாடு என்று நினைத்தனர். எனவே கடல்களின் நடுவே என்று பொருள்படும் ஹாய்னெய் என்று சீனாவை அவர்கள் அழைத்தனர். வெளிநாடுகளை ஹாய்வாய் அதாவது கடல்களுக்கு அப்பாலுள்ள என்று குறிப்பிட்டனராம்.

சீனாவின் பெயருக்கு பின்னணியிலான தகவல்களை தேடிய போது சீனாவின் சில இடங்களுக்கான சிறப்புப் பெயர்கள் அல்லது சாட்டுப்பெயர்களும் நமக்கு கிடத்தது. இதோ அவற்றையும் உங்களுக்கு அறியத்தருகிறோம்.

சாட்டுப்பெயர் அல்லது சிறப்புப்பெயர் என்றால், பொதுவாக நாம் உலகின் கூரை என்று சொன்னால் திபெத் என்று அறிவோம். நள்ளிரவு சூரியன் நாடு என்று நார்வே அழைக்கப்படுவதும், மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுவதும் சீனாவின் துயரமென மஞ்சள் நதி அழைக்கப்படுவதும் இந்த வகையில்தான் சேரும்.

சீனாவின் ஜியாங்சு மாநிலத்திலுள்ள யிஷிங் நகரம் வனைதொழில் அல்லது மட்பாண்டத்தொழிலின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

சிச்சுவான் மாநிலத்தின் நான்சோங் நகரம், பழங்களின் நகரமாக அழைப்படுகிறது. குவாங்சி மாநிலத்தின் நான்சிங் நகரம் மலர்கள் மற்றும் கனிகளின் நகரமாக அழைக்கப்படுகிறது.

1 2 3