• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-02 16:01:01    
நிலநடுக்க கண்காணிப்பு

cri

சிச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தின் அளவை உறுதிப்படுத்தும் போக்கு இதை போன்றதே. மே 12ம் நாள் நிலநடுக்கம் நிகழ்ந்தது. 6 வினாடிக்கு பின், அதன் அலை பற்றிய தரவு அருகிலுள்ள செங் து நிலநடுக்கக் கண்காணிப்பு நிலையத்துக்கு கிடைத்தது. சில நிமிடங்களுக்குப் பின், சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் நிலநடுக்கத்தின் அளவை அறிவித்தது. 18ம் நாள், சர்வதேச விதிகளின் படி, சீன நிலநடுக்க கண்காணிப்பு துறை, பல்வேறு நிலையங்களிலிருந்து சேகரித்த தரவுகளின் படி, அளவீடு மற்றும் பகுத்தாராய்வு செய்து, அதன் அளவை 8.0 ஆக மாற்றியது.

சுன் ஷி ஹுங் மேலும் கூறியதாவது

உலகில் ஆஸ்திரேலியா, நியு சிலாந்து, அமெரிக்கா முதலிய சில வெளிநாட்டு நிலையங்களுடன் தரவுகளை பரிமாற்றம் செய்யும் வழக்கம் உண்டு. சிச்சுவான் நிலநடுக்கத்தின் அளவைத் திருத்துவதில், சில வெளிநாட்டு நிலநடுக்க கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.

எண் என்ற ரீதியில், 7.8க்கும் 8.0க்கும் இடையில் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால், நிலநடுக்கத்தின் வீச்சை பொறுத்தவரை அவற்றில் பெரும் இடைவெளி உள்ளது என்று சுன் ஷி ஹுங் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது

ரிச்டர் அளவுகோலில் 8ஆக பதிவான நிலநடுக்கத்தில் வெளியேறும் ஆற்றல் அளவு, 7.8 ஆக இருப்பதை விட சில மடங்குகள் அதிகம் என்றார் அவர்.

நிலநடுக்க அளவுகோலில் ஒரு பதிவு அதிகரித்தால், அதில் வெளியேறும் ஆற்றல் அளவு சுமார் 30 மடங்கு அதிகமாகும் என்று சுன் ஷி ஹுங் எடுத்துக் கூறினார். சிச்சுவான் நிலநடுக்கத்தில் பெரும் அளவிலான ஆற்றல் வெளியேறியது. பூர்வாங்க ரீதியான புள்ளிவிவரங்களின் படி, சீனாவில் ஒரு இலட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேலான நிலப்பரப்பு இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


1 2 3