கலை........ இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது கேள்வியை பார்ப்போமா.
தமிழன்பன்....... சிறுநாயக்கண்பட்டி கே வேலுச்சாமி சீனாவில் பால் உற்பத்தி வளர்ச்சி பற்றி அக்கறை காட்டியுள்ளார். இது பற்றி விரிவாக எடுத்துரைக்கு மாறு அவர் கேட்டுள்ளார்.
கலை......இது பற்றி விளக்குவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழன்பன்....ஆமாம். பால் உற்பத்தி வளர்ச்சி பற்றி அறிய முதலில் சீனாவில் பால் உற்பத்தியின் பொதுவான நிலைமை பற்றி பார்க்க வேண்டும்.
கலை......சீனா அதிகமான மக்கள் தொகை கொம்ட நாடாகும். 2006ம் ஆண்டில் சீன பாதல் உற்பத்தி அளவு 3 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரம் டன்னை எட்டியது. பால் உற்பத்தி அதிகரிப்பு ஆண்டுக்கு 23.8 விழுகாடாக இருக்கின்றது.
தமிழன்பன்......அப்படியிருந்தால் நாட்டின் பால் உற்பத்தி மேம்பாட்டை கொண்ட தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பூர்வாங்கரீதியில் உருவாகியுள்ளது.
கலை......ஆமாம்.
தமிழன்பன்.......சரி மக்களிடையில்யேயான பால் நுகர்வு அளவு எவ்வளவு?
கலை.......2006ம் ஆண்டின் பதிவு செய்யப்பட்ட தகவலின் படி சீனாவின் சராசரி நகர மற்றும் கிராம வாழ் மக்களின் பால் நுகர்வு அளவு 1.5 லிட்டரை எட்டியது.
தமிழன்பன்.......இந்த நுகர்வு அளவை நிறைவேற்றும் வகையில் சீனா ஆண்டுக்கு எவ்வளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும் ?
கலை........நான் ஏற்கனவே சொன்னதை போன்று 3 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரம் டன் பால் அளவு இருந்தாலும் மக்களின் நுகர்வை முழுவதுமாக நிறைவேற்ற முடியாது.
1 2 3
|