• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-11 09:34:43    
சீனாவின் பால் உற்பத்தி நிலைமை

cri

தமிழன்பன்.........பால் உற்பத்தியை விரைவாக தூண்டி மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் நடுவண் அரசு பசு வளர்ப்புக்கான சலுகை கொள்கையை வகுத்துள்ளது என்று நினைக்கின்றேன்.

கலை......ஆமாம். இதன் விளைவாக yili、 mengniu、sanlu、 guangming、 wandashan、 sanyuan உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆற்றல் மிக்க பால் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் விரைவாக வளர்ந்து பயன் மிக்க அளவில் வணிக சின்னம் உடைய பால் உற்பத்தியை நடத்திவருகின்றன.

தமிழன்பன்.......இந்த தொழில் நிறுவனங்கள் மிக விரைவாக

வளர்ந்ததால் பசு வளர்ப்பு மற்றும் பால் தயாரிப்புத் துறை வேளாண் வளர்ச்சிக்கும் கிராமப்புறப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.

கலை.........சரிதான். இவ்வளவு தொழில் நிறுவனங்களின் பால் உற்பத்திக்கு துணை புரியும் வகையில் பல்வகை பசுக்களை வளர்க்கும் குடும்பங்களின் எணஅணிக்கையும் பெருமளவில் வளர்ந்துள்ளது.

தமிழன்பன்........தனிப்பட்ட முறையில் பசு வளர்ப்பு குடும்பங்களின் எண்ணிக்கை இதுவரை எவ்வளவு என தெரியுமா ?

கலை.......ஆமாம்.பசு வளர்ப்பில் இதுவரை 21 இலட்சம் விவசாய குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.

தமிழன்பன்....... பால் விற்பனை செய்வதன் மூலம் அவை பெற்றுள்ள வருமானம் எவ்வளவு?

கலை......பால் விற்பனை மூலம் பெற்றுள்ள மொத்த வருமானம் 6730 கோடி யுவானை எட்டியது.

தமிழன்பன்......அப்படியிருந்தால் ஒவ்வொரு குடும்பத்தின் வருமானம் எவ்வளவாக இருக்கும்?

கலை.......சராசரியாக குடும்ப வருமானம் 32 ஆயிரம் யுவானை எட்டும்.

தமிழன்பன்.........பசு வளர்ப்பு மற்றும் பால் விற்பனை மூலம் வங்கித் துறை, சுங்த் துறை, தீவன தயாரிப்புத் துறை முதலியவற்றுடன் தொடர்புடைய துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன.

கலை......நீங்கள் குறிப்பிட்டது சரிதான். துறையின் வளர்ச்சி மட்டுமல்ல கிராமப்புறங்களிலான இதர தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதேவேளையில் பயிரிடும் துறையின் கட்டமைப்பின் சீர்திருத்தமும் தூண்டப்பட்டுள்ளது.

1 2 3