• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-17 11:59:05    
Cheng Du நகரின் குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை

cri

சிச்சுவான் மாநிலத்தின் Cheng Du நகரில் வாழும் மக்கள் 15 நிமிட நேரத்தில் மருத்துவ நிலையங்களை அடையும் வசதியை பெற்றுள்ளனர். குடியிருப்புப் பிரதேசங்களில் மருத்துவ சேவை பரவி வருகிறது. வீட்டுக்கு அருகிலேயே மக்கள் சிகிச்சை பெற முடியும். கடந்த சில ஆண்டுகளாக, Cheng Du நகரின் கம்யூனிஸ்ட் கட்சிக் கமிட்டியும், அரசும், குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவையில் பெரும் கவனம் செலுத்தியுள்ளன. இந்நகரின் மருத்துவ சேவை, நாடளவில் முன்னணியில் இருக்கின்றது.

தற்போது, Cheng Du நகரில், 85.18 விழுக்காட்டு நகரவாசிகள், குடியிருப்பு பிரதேச மருத்துவ சேவை பற்றி அறிந்து கொண்டிருக்கின்றனர். 69.82 விழுக்காட்டு மக்கள், குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை பெற்றிருக்கின்றனர். 82.65 விழுக்காட்டினர், இச்சேவை பற்றி மனநிறைவு தெரிவிக்கின்றனர். Cheng Du நகரின் மையப் பகுதியில், குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை பரவல் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பு வாழ்மக்கள், வீட்டிலிருந்து, 15 நிமிட நேரத்தில் மருத்துவ நிலையத்தை அடைய முடியும். நகரவாசிகள் சிகிச்சை பெறுவது கடினம் என்ற பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன், நகரவாசி Zhou De Yu அம்மையார் Cheng Du நகரில் உள்ள Xin Hua குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை மையத்துக்கு முதன்முறையாக சென்றார். அப்போது முதல், அவர் அடிக்கடி இம்மையத்துக்குச் சென்று, சிகிச்சை பெறுகின்றார். அவர் செய்தியாளரிடம் பேசுகையில், முன்பு தாம் நோய் வாய்பட்ட போது, முதலில் பெரிய மருத்துவமனைக்குச் சென்றதாக கூறினார். மருத்துவமனை வெகு தொலைவில் இருக்கின்றது என்றும், அதிக பணத்தொகை செலவிட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"முதலில், குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை மையத்தில் சிகிச்சை பெற்றால், மருத்துவ கட்டணம் அதிகமில்லை. மருத்துவர்களின் சேவை சிறப்பானது. தவிர, மருத்துவர்களின் ஒழுக்க நெறி சிறப்பாக உள்ளது. அவர்களின் மருத்துவநுட்பம் பரவாயில்லை" என்றார், அவர்.

தற்போது, அவரும் அவரது குடும்பத்தினரும் குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை மையத்தில் சிகிச்சை பெறுகின்றனர். அவரது அண்டை வீட்டுக்காரர்களும் இதே தெரிவை செய்துள்ளனர். அவர் வாழும் குடியிருப்புப் பிரதேசத்தில், மையத்துக்குச் சென்று சிகிச்சை பெறுவது, சாதாரண விடயமாகும். Xin Hua குடியிருப்புப் பிரதேச மருத்துவர் Zhang Hui கூறியதாவது:

"மக்கள் சளி போன்ற நோய்களால் பீடிக்கப்படும் போது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கின்றோம். கடும் நோய் ஏற்படும் போது, நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றோம். மிகவும் கடுமையான நோய் ஏற்பட்டால், நாங்கள், உற்றார் உறவினராக அவர்களைப் பராமரிக்கின்றோம்" என்றார், அவர்.

வாரந்தோறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைத் தவிர, குடியிருப்புப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொது மக்களுக்கு அடிப்படை மருத்துவ அறிவுகள், சீனப் பாரம்பரிய மருத்துவ தத்துவம் முதலியவற்றை பற்றி Zhang Hui விவரிக்கின்றார். துவக்கத்தில், அவரது ஆலோசனைகளை கேட்க வந்த மக்கள் குறைவு. தற்போது குடியிருப்புப் பிரதேசத்தில் மிகவும் வரவேற்கப்படும் மக்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040