• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-17 11:59:05    
Cheng Du நகரின் குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை

cri

தற்போது, குடியிருப்புப் பிரதேசத்தில், 210 குடும்பங்களில் இம்முறைமை பொருத்தப்பட்டுள்ளது.

நகரவாசிகள் குறைந்த விலையில் சிகிச்சை பெற்று, மருந்துகளை வாங்கி, நன்மை பெறும் பொருட்டு, 2006ஆம் ஆண்டின் மார்ச் திங்கள் முதல், Wu Hou வட்டத்தில், குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை மையத்தில் மருந்துகள் தொடர்பான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், Wu Hou வட்டத்தில் வாழும் 5 லட்சத்து 70 ஆயிரம் மக்கள், சிகிச்சை பெற்று, மருந்துகளை வாங்கும் போது, முன்பை விட சுமார் 20 விழுக்காட்டு செலவை சிக்கனப்படுத்த முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக, Cheng Du நகரில் குடியிருப்புப் பிரதேச மருத்துவ சேவை பெரிதும் வளர்க்கப்பட்டுள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பிரதேசங்களில் சுமார் 100 மருத்துவ சேவை அமைப்புகள் இருக்கின்றன. குடிமக்கள் 15 நிமிடத்தில் மருத்துவ நிலையத்தை அடையலாம். சிறு நோயால் பீடிக்கப்படுவோர் குடியிருப்புப் பிரதேசத்தில் சிகிச்சை பெறுவது, கடும் நோயால் பீடிக்கப்படுபவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவது, நோயாளி குடியிருப்புப் பிரதேசத்துக்கு திரும்பி, குணமடைவது என்ற முறை படிப்படியாக உருவாகியுள்ளது.


1 2 3