 திருமணங்கள் உள்ளிட்ட கொண்டாட்ட விருந்துகளுக்கு ஆள் வைத்து சமைத்து அருகிருந்து அவர்கள் செய்வதை பார்த்து, ருசிக்கு பதம் சொல்லி, கக்கத்தில் கைப்பையுடன் பக்கத்தில் நின்று அவர்கள் பறிமாறுவதை பார்த்த காலம் போய், கேட்டரர்ஸ் எனும் எங்கோயோ சமைத்து நாம் சொல்லுமிடத்திற்கு வந்து பரிமாறிச்செல்லும் சமையல் ஒப்பந்தக்காரர்களுக்கு நாம் பழகிவிட்ட நிலை. இன்றைக்கு உணவுத்துறை அல்லது உணவகத்துறை மிகுந்த முக்கியத்துவம் பெறும் துறையாகவுள்ளது.
சமையற்கலையை நளபாகம் என்று கூறக் கேட்டிருப்போம். மகாபாரத காலத்தில் நிடத நாடு என்ற நாட்டை ஆண்டு வந்தவந்தான் நளன். இவன் சமையற்கலையில் வல்லவனாம். நீரும் நெருப்புமின்றி சமையல் செய்யக்கூடிய வித்தையை அறிந்தவன் நளன். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அத்தியாவசிய தேவைகளில் முதலிடம் பெறுவது உணவுதானே. உணவே நமது உயிர்வாழ்வுக்கு அடிப்படை. அதையும் சுவைகூட செய்து, அருந்தத்தக்கதாக மாற்றுவதே சமையல்.
1 2 3
|