
பல்லாண்டுகளாய் ஓரிடத்தின் முக்கிய உணவு வகைகளும், அவ்விடத்து சமையற்கலையும் அந்தந்த இடத்தின் பண்பாட்டு அம்சமாக மாறியுள்ளன. ஆந்திரத்து கோங்க்ரா சட்டினி, கேரளத்து குழாய்ப்புட்டு, செட்டிநாடு கோழிக்குழம்பு, நெல்லூர் மீன் குழம்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதையே சர்வதேச அளவில் கூறினால், இத்தாலிய ஸ்பகெட்டி மற்றும் பீட்சா, சீனத்து நூடுல்ஸ், இந்தியாவின் பிரியாணி மற்றும் தந்தூரி உணவு வகைகள், அரபு நாடுகளின் கபாப் எனும் கம்பி அல்லது குச்சியில் வைத்த இறைச்சி என்று பட்டியல் நீளும்.
சமைக்கும் உணவு எப்படி முக்கியமோ, அதை தயாரிக்கும் முறையும், பார்த்தவுடன் நாவில் நீருரும்படி பரிமாறும் பாங்கும் முக்கியமே. சீனர்களும் தங்களது உணவுத் தயாரிப்பு மற்றும் பரிமாறலில் மிக நுட்பமான கவனம் செலுத்துகின்றனர். விருந்துண்டபடி பல வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாகும் அழகு சீனாவில் வெகு இயல்பாக காணப்படலாம். எந்த ஒரு கூட்டமோ, சந்திப்போ ஆயினும், உணவோடு இல்லாது போனால் அது முழுமையற்றதாகவே கருதப்படும்.
1 2 3
|