• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-23 23:29:47    
நளபாகம் அ

cri

சீன வரலாற்றில் உணவுக்கும், சமையலுக்கும் பெரும் பங்கு உண்டு என்று சொன்னால், கேட்க கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அல்லவா... சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட, ஒரு தலைமை நிர்வாகி அல்லது இயக்குனரின் பணியை சீன அரசு எப்படி வர்ணித்தது அல்லது அழைத்தது தெரியுமா? முக்காலியை சரி செய்தல் அல்லது ஒழுங்குபடுத்தல். சீனாவில் முக்காலி என்பது சமையல் பாத்திரத்தை உணர்த்தும் ஒரு பொருளாகும். ஆக தலைமை நிர்வாகியின் பணி, சமையல் பாத்திரங்களை சரியாக்குவது அதாவது பாத்திரத்தில் உள்ள உணவை சரிசெய்வது என்று கூறப்படுகிறது. காரணம் சாப்பிடுபவரின் நாவுக்கு சரியான ருசிதரும்படி, போதிய பொருட்களை சேர்ப்பது உள்ளிட்ட வழிமுறைகளை போலத்தான் ஒரு நிர்வாகியோ, தூதாண்மை அதிகாரியோ தனது திறமையை பயன்படுத்தி, இலக்கை நிறைவேற்றுகிறார். சமையல் அல்லது உணவு பொறுப்புக்கும், ஆற்றலுக்குமான ஒரு உருவகமாக சீனாவில் பார்க்கப்படுவதை இது நமக்கு உணர்த்துகிரது அல்லவா. இது மட்டுமல்ல, சீனாவில் அனைத்து மட்டத்திலுமான மக்களிடையே சுமூகமான உறவும், வெற்றிகரமான தொடர்பும் நிலவ ஒரு கால்வாய் போல் உணவு, சமையல் அமைந்திருந்தது, இன்றளவும் அவ்வாறே நீடிக்கிறது. இது பற்றி விபரமாக அறிந்துகொள்வோம்.


1 2 3