 ஷன் துங் மாநிலத்தின் Yan Tai, கடலோர நகராகும். இந்நகரின் வெளிநாட்டுத் திறப்புப் பணி செவ்வனே நடைபெற்றுள்ளது. "ஈர்ப்பு ஆற்றல் மிக்க நகர்", "நாகரீக நகர்" மற்றும்"சுகாதார நகர்" போன்ற பெருமைகள் Yan Tai நகருக்கு சூட்டப்பட்டுள்ளன. இப்பெருமைகள், Yan Tai நகரின் நிலவியல் மேம்பாட்டிலிருந்தும், இந்நகரை ஆழமாக நேசிக்கும் துப்புரவு தொழிலாளர்களின் முயற்சிகளிலிருந்தும் பிரிக்கப்பட முடியாதவை.
Yan Tai மலையடியில் உள்ள Bin Hai சதுக்கம், இந்நகரின் அடையாளமாக திகழ்கின்றது. இச்சதுக்கத்தில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்கள், "கடலைப் பாதுகாப்பவர்" என மக்களால் அழைக்கப்படுகின்றனர். இக்காட்சி தளத்துக்கு அருகில் உள்ள 1.2 சதுர கிலோமீட்டர் கடல் நீரின் மேற்பரப்பில் காணப்படும் மர இலைகள், கழிவுப் பொருட்கள் நீர் நுரை உள்ளிட்ட மாசுபாடுகளை அகற்றுவதே அவர்களின் கடமையாகும். கடற்கரையில் உள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைத் திரட்டுவது அவர்கள் பணியாகவுள்ளது.
நாள்தோறும் காலை ஏழு மணியளவில், துப்புரவு தொழிலாளர்கள், 6 மீட்டர் நீளமுடைய, நீர் மாசுபாட்டை அகற்றும் கருவியைக் கொண்டு, குறிப்பிட்ட இடங்களில் தத்தமது துப்புரவு பணியைக் துவக்குகின்றனர்.
கடந்த அக்டோபர் திங்கள் நடுப்பகுதியில், செய்தியாளர் Bin Hai சதுக்கத்துக்கு வந்ததும், நீல நிற ஆடை அணிந்திருந்த ஒருவரால் ஈர்க்கப்பட்டார். அவர் நீர் மாசுபாட்டை அகற்றும் கருவியை பிடித்துக் கொண்டே, கடல் நீரின் மேற்பரப்பில் இருந்த புட்டிகள், நுரை உள்ளிட்ட குப்பைகளை அகற்றி, நீரை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.
1 2 3
|